பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VIII

நுட்பப்பிரிவுகட்கான கலைச் சொற்களும் விளக்கங்களும் இடம் பெற்றன மூன்றாவது தொகுதி 1995இல்'மருத்துவ, அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி என்ற பெயரில் வெளிவந்தது 56 அறிவியல் 'தொழில் நுட்ப, மருத்துவப் பிரிவுகட்கான கலைச் சொற்களையும் விளக்கங்களையும் கொண்டதாக அது அமைந்தது. இந்நூல் அரசு, மக்களின் பேராதரவையும் பெற்றது. இதழ்களும் நூலாசிரியர்களும் அறிவியல் தமிழ் ஆர்வலர்களும் என் முயற்சியைப் பாராட்டி ஊக்கு வித்தனர். 'அனந்தாச்சாரி ஃபெளணடேஷன் ஆஃப் இந்தியா' போன்ற அமைப்புகள் பரிசும் பாராட்டும் வழங்கிச் சிறப்பித்தனர்.

இதே போக்கில் மருத்துவவியலின் பதினைந்து பிரிவுகட்குரிய ஆங்கிலக் கலைச் சொற்களுககு நேர்த் தமிழ்க் கலைச் சொற்களும் அவற்றிற்கான பொருள் விளககமும் படங்களோடு தயாரிக்கத் தொடங்கினேன். ஆங்கிலக் கலைச் சொற்களை இனங்கண்டு தேர்வு செய்வதில் என மகன் டாக்டர் செம்மலின் பங்கு கணிசமானது. தமிழ்க் கலைச் சொல் உருவாக்கத்திலும் தமிழில் பொருள் விளக்கம் வரைவதிலும் நணபர் திரு இரா. நடராசனின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். நாங்கள் எவ்வளவுதான் திறம்படச் செயல்பட்டாலும் மருத்துவவியல் வல்லுனர் என்ற முறையில் ஸ்ரீராமச்சந்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரும் நீண்ட காலமாக என் அறிவியல் தமிழ் வளர்ச்சி முயற்சிகளுக்குப் பின் துணையாக இருப்பதில் பெருமகிழ்வு கொள்பவருமான பேராசிரியர், டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்கள் தனக்குள்ள பெரும் பணிகளுக்கிடையேயும் வரிவரியாகப் படித்து குறை நிறைகளைச் சுட்டிக் காட்டியும் தேவையான மாற்ற திருத்தங்களைச் செய்து செப்பனிட்டும் நூலை முழுமைப்படுத்தித் தந்தார்கள். மாநிலத் திட்டக் குழு உறுப்பினராகவும் உள்ள அவர்கள் ஒரு நாளைக்குக குறைந்தது பத்துப் பக்கங்களாவது படிப்பது எனத் தனக்குத்தானே கண்டிப்பான வரையறை செய்து கொண்டதோடு, வாரத்திற்கு ஒருமுறை என்னுடன் கலந்துரையாடுவது என்ற முறையையும் கடைப்பிடிதது வந்தார்கள். அப்போதெல்லாம் மருத்துவச் செய்திகளை இனிய தமிழ் நடையில் ஆங்கிலத்தை விடத் தெளிவாகத் தமிழில் தரமுடிகிறதே என வியந்து பாராட்டத் தவறுவதில்லை. அச் சமயங்களில் அவர்களின் தமிழார்வமும் தமிழறிவும் மருத்துவத்துறைப் புலமையும் திறனாளர்களை ஊக்குவிக்கும் பாங்கும் என்னை வியக்கவைக்கும்.