பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை

வறுமைச் சூழலுக்கு ஆளான குடும்பத்தில் பிறந்து, பெற்றோர் செய்தொழிலில் தானும் உழைத்தவாறே, பள்ளியில் சேர்ந்து படித்திடத் தானே வலியச் சென்று சேர்ந்து, ஒய்வு வாய்த்த போதெல்லாம் ஏடுகள் பல பயின்று. இளம் பிள்ளையாய்த் தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்டு, சமூகததில் மூடநம்பிக்கைகளை மறுக்கும் துணிவெய்தி, அறிஞர் அண்ணாவின் உரையினைக் கேட்டு ஊக்கங்கொண்டு, பள்ளியிலேயே கட்டுரை வரைவதில் வல்லவனாகி, பின்னர் பேச்சாற்றலும் காட்டிப் பரிசுகள் பல பெற்று, தமிழறிஞர் பலராலும் பாராட்டப்பட்ட மாணவ மணியாகி, அண்ணாமலை பல்கலைக் கழகம் சார்ந்து தமிழில் முது கலைஞனாக, தமிழ்த் தொண்டே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, வாய்த்த கல்லூரி ஆசிரியர் பணியையும் ஊதியத்தையும் துறந்து தமிழ் ஆக்கத்திற்கே முழுநேரம் உழைத்திடும் உறுதி பூண்டு, ஏடுகட்கு எழுதுவதையே வாழ்க்கைத் தொழிலாக ஏற்று, தென்மொழிகள் புத்தக நிறுவனத்தின் பணியில் சேர்ந்து, அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் கலை ஏடுகளும் வெளிவர மூலநூலைச் சீர்செய்து மெய்ப்புத் திருத்துவதில் திறன்காட்டி, முத்திங்கள் இதழான 'புத்தக நண்பனைச்' சீருற வெளியிட்டு, யுனெஸ்கோவின் அறிவியல் பேழையாம் 'கூரியர்' ஏட்டின் தமிழ்ப்பதிப்பை வெளியிடும் பணியிலும் பங்கேற்றுத் தன் மதிநுட்பம் காட்டியும் நிறுவனத்தார் மதிப்பைப் பெற்றும் பொறுப்பாசிரியராய் உயர்ந்து, கால் நூற்றாண்டாக அதன் செவிலித் தாயாகச் சீராட்டி வளர்த்து வருபவர்தான் என் நண்பர் மணவை முஸ்தபா என்னும் தமிழ் மறவர்.

'கூர்யர்' ஏட்டினைத் தமிழில் வெளியிடும் சிறப்பினை யுனெஸ்கோ பாராட்டிய செய்தி கண்டு உவந்த தமிழுள்ளங் கொண்ட காயிதேமில்லத் இசுமாயில் சாகிப் பழங்கிய அ ைபுப் பாராட்டும் வாழ்த்தும் முஸ்தபாவின் தமிழ்த் தொண்டினை மேலும் ஊக்குவித்தது. அவரது அயராத அறிவியல் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி சிந்தனையாளர் பேரவை சார்பில் தமிழக முதல்வர் கலைஞரால், "அறிவியல் தமிழ்ச் சிற்பி என் னும் பாராட்டுப் பட்டமும் வழங்கிட அவரது அரிய தமிழ்த் தொண்டு தமிழுலகின் மதிப்பைப் பெற்றது. தமிழக அரசின் "கலைமாமணி’விருதும், திரு.வி.க. விருதும் இன்னும் பலவகை பாராட்டுகளையும் பெற்ற பெருமை அவருக்கு உண்டு. பெரி யாரின் பகுத்தறிவுச் சிந்தனைத் தாக்கம் அவரை மூடநம்பிக்கை யை விரட்டும் அறிவியல் சிநதனையை வளர்ப்பதிலும், அறிஞர்