பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை

தமிழுக்குப் பொற்காலம் பூத்துவரும் காலகட்டத்தில் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மேலும் வலுவூட்டும் வகையில் திரு மணவை முஸ்தபாவின் 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' நூல் வெளிவருகிறது. இந்நூலை விரித்தபோது எனக்கு வியப்பும் திகைப்பும் ஏற்பட்ட்தென்றே கூற வேண்டும. இன்றையச் சூழ்நிலையில் தமிழ் வளர்ச்சிக்கு குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை 'கலைச் சொல்லாக்கம்' எனப் பேசியும் எழுதியும் வருகிறோம். அத்துறையில் பல ஆண்டுகளாக முனைப்புடன் ஈடுபட்டு பலநூறு கலைச் சொற்களை உருவாக்கி, அவற்றை நூலுருவில் வெளியிட்டு வரும் திரு மணவையார், இப்போது மருத்துவக் கலைச்சொல் தொகுப்பை வெளியிடுகிறார். மருத்துவத் துறையின் பதினைநது பிரிவுகளுக்கான சுமார் பத்தாயிரம் கலைச் சொற்களைக் கொண்டுள்ளது இந்நூல்.

கல்லூரி மட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவப் படிப்புகளில் சில பிரிவுகளை தமிழைப் பயிற்று மொழியாகச் கொண்டு கற்பிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் முயற்சி மேற்கொண்டு வரும் வேலையில் இந்நூல் வெளிவருவது மிகவும் பொருத்தமுடையதாகும்.

மருத்துவத்தைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது, மருத்துவம்பற்றி நூல் எழுதுவோருக்கு, குறிப்பாக பாடநூல் எழுதும் நூலாசிரியர்கட்குப் பெரிதும் பயனபடும் வகையில் திரு மணவை முஸ்தபா இம் 'மருததுவக் கலைச்சொல் களஞ்சியம்' நூலை உருவாக்கியுள்ளார், மருத்துவ நூல் எழுதுவோர் எளிதாக இக்கலைச் சொற்களைப் பயன்படுத்தி இடர்ப்பாடின்றி எளிதாக நூல் எழுத இயலும். இந்நூலில் இடம்பெற்றுள்ள மருத்துவத் தமிழ்க் கலைச் சொற்கள் சொற்செட்டும் பொருட்செறிவு முடையவைகளாக சுருங்கிய வடிவில் அமைந்துள்ளன. ஒரு ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு ஈடாக, ஒன்றுககு மேற்பட்ட தமிழ்க் கலைச் சொற் கலைக் கூறுவதன் மூலம் வாசகர்களும், நூல் எழுதுவோர்களும் இடத்திற்கேற்பப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்து