பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

எடுத்து பயன்படுத்த வாய்ப்பளிப்பது இந்நூலின் மற்றொரு சிறப்புத் தன்மையாகும்.

'அகராதி', 'களஞ்சியத்' தன்மைகள் ஒருங்கிணைந்து புது வடிவெடுத்துள்ள இந்நூல், தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே முதலாவதாக வெளிவந்துள்ள 'மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்' என்ற சிறப்பைப் பெறுகிறது. மேலும், இந்நூல் தமிழில் பலப்பல மருத்துவ நூல்கள் வெளி வர துணைநிற்கும் அடித்தள நூலாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

திரு மணவை முஸ்தபா அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது பணி தொடர்ந்திட வேண்டுமெனும் என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆற்காடு நா. வீராசாமி (மக்கள் கல்வாழ்வு மற்றும் மின்துறை அமைச்சர்)