பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஆய்வுரை

தமிழில் பேச்சுவழக்கில் "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். திரு மணவை முஸ்தபா அவர்கள் படைத்திருக்கும் "மருத்துலக் கலைச்சொல் களஞ்சியம்' என்ற இந்த நூல் அடிப்படையில் ஒரு கலைச்சொல் அகராதியாக மட்டுமின்றி, மருத்துவக் கலைக் களஞ்சியமாகவும் உருப்பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு மாங்காய்களுடன் ஆசிரியர் நின்றுவிடவில்லை. மூன்றாவது ஒரு மாங்காய் விழுந்தாலும் விழட்டுமே என்ற கருத்தும் மறைவாக மிளிர்கிறது. அகராதியைப் பயன்படுத்துவோர் சிந்தனைக்கு ஒரு தூண்டுகோலாகவும் இந்நூல் இயங்க வாய்ப்பிருக்கிறது. சுமார் ஐந்நூறு பக்கங்கள் அடங்கிய இந்த மருத்துவ அகராதிக் கலைக்களஞ்சியத் தொகுப்பினை பயன்படுத்துவோர். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைச் சொற்களைவிட சிறந்த வேறு பொருத்தமான சொறகளைப் புனைய முன்வரின் மூன்றாவது குறிக்கோளும் நிறைவுபெறும்.

இன்றைய மருத்துவ அறிவியல் சொற்களுக்கெல்லாம் தனித் தமிழ்ச் சொற்களை உருவாக்கி, அவைகளைப் பயன்படுத்தி, மருத்துவ நூலாக்கத்தை இயக்கி-மருத்துவம் சார்ந்த கல்வி-மற்றும் பயிற்சி அரங்குகள் அனைத்தும் தமிழில் வர வேண்டும் என்று காத்திருந்தோமானால் அது அண்மைக்காலத்திற்குள் நிறைவேறக் கூடிய கனவாக இருக்காது.

இலண்டன் மாநகரத்தில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து சில காலம் 'அறிவியல் ருசிய மொழி" பயிற்சி பெற்றேன். நான் ஏற்கெனவே ஆங்கிலத்தில் பழகியிருந்த பல மருத்துவச் சொற்கள் உருசிய மொழி அறிவியல் கட்டுரைகளில் பயன்படுத்தப் படுவதைப் பார்த்தேன். ஆசிரியையாக இருந்த உருசியப் பெண்மணியிடம் இதுபற்றிப் பேசினேன். அவர்கள் சொன்ன கருத்தை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் கருதி கீழே தருகிறேன்; 'உலகில் பல பகுதிகளும் ஒரளவு நாகரிகம்' வளர்ச்சியடைந்திருந்த காலத்தில் கருத்துப் புரட்சி, சமுதாயப் புரட்சி இவை ஐரோப்பாக் கண்டத்தில் தோன்றி, அறிவியல் வளர்ச்சிககும் ஆராய்ச்சிக்கும் வித்திட்டன.

பலவாறான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப் பட்டன. பல புதிய கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிமுகமாயின. இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று, புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல அறிவியல் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு, உலகுக்கு அறிமுக