பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

ஆங்கில மருத்துவச் சொற்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்று அறியும்போது சில சொற்கள் காரணப் பெயர்களாக இருக்கக் காண்கிறோம். அதே காரணங்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து அவற்றில் இருந்து புதுத்தமிழ் மருத்துவச் சொற்களை உருவாக்கும் வழியும் கடைப்பிடிக்கப்பட்டு, அப்படி சில நல்ல சொற்கள் நமக்குக் கிடைத்திருக் கினறன. 'Thyroid' என்பதற்கு 'கேடயச் சுரப்பி' என்றும் ' Adrenal' என்பதறகு 'அண்ணீரகச் சுரப்பி' என்றும் சொற்கள் உருவாக்கப்பட்டு அவை தமிழில பழக்கத்தில் வந்து விட்டன. இவைகளை எல்லாம் கூடியவரை ஆசிரியர் அகராதிக்குள இணைததிருக்கிறார்.

நாட்டுப்புற மக்கள் சில சமயங்களில் அனுபவரீதியில் அவர்களாகவே சில சொற்களை உருவாககி விடுவார்கள். மலேரியா காய்ச்சலை 'முறைக் காய்ச்சல்' எனறும் தூரத்துப் பார்வையை 'வெள்ளைமுத்து' என்றும 'wrist என்பதற்கு 'மணிக்கட்டு' எனறும் தமிழ்ச் சமுதாயம் ஏற்கனவே உருவாக்கி விட்ட சொறகளையும் நாம் தள்ளிவிட முடியாது. அவைகளை நம்முடைய சொற்களஞ்சிய தொகுப்புகளில் சேர்க்கத்தான் வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் பல புதுச் சொற்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழியில் தொடர்புடைய பொருள் தரும் சொற்களில் வேர்ச் சொற்களை ஆராய்ந்து எடுத்து அவற்றில் இருந்து புதுச் சொற்களை உருவாக்கியிருக்கிறார்கள். மார்ஃபின் (morphine) என்னும் மருந்து தூக்கத்தை உண்டாக்கும். கிரேக்கப் புராணத்தில் கனவுக்கு (dreams) பொறுப் பான கடவுள் மார்ஃபியோ. அதனால் இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டவுடன் அதற்கு மார்ஃபின்' என்று பெயர் சூட்டினார் அதைக் கண்டுபிடித்த வேதியல் நிபுணர். அப்படிப்பட்ட சொற்கள் அனைத்தையும் காரணச் சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லையும் அதன் வேர்ச் சொல்லையும் கண்டுபிடித்து அதிலிருந்து புதிய தமிழ்ச் சொல்லை உருவாக்கலாம் என்று நினைத்தோமானால் அது முடிவே இல்லாத பணியாகிவிடும். அப்படிப்பட்ட பல சொறகளை நாம அப்படியே தமிழில் எழுதி பயன்படுததிக் கொள்ள வேணடிய சூழ்நிலையில்தான இருக்கிறோம். வேறு புதுச் சொற்களை உருவாக்க முடியாத இததகு சூழ்நிலைகளில் இன்று ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களை எடுத்துத் தேவைக்கேற்றபடி பகுதி, விகுதி மாற்றங்களை மட்டும் செய்து கொணடு, தமிழ்ப் பழக்கத்திற்கு அவைகளை கொண்டு வர