பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|S

முயற்சியாய் இருக்கக்கூடும் என்று நம்புகிறேன். ஒரு சொல் மூலம், ஒரு மருத்துவச் செய்தியைக் கூறுவதன் மூலம் சாதா ாணப் படிப்பறிவு உள்ளவர்களும் மருத்துவ அறிவு பெறவும் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் துணை செய்வதாகும்.

இந்நூலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் பல இடங்களில் தெளிவான படங்களையும், பட விளக்கங்களையும் கொண்டமைந்திருப்பதாகும். எல்லா வகையிலும் நூல் சிறப் பாக அமைய வேண்டும் என்னும் ஆசிரியரின வேட்கையை இது புலப்படுத்துகிறது. இந்நூல்வழி மேலும் பல மருத்துவத் தமிழ் நூல்கள் பெருமளவில் வர வகை செய்துள்ளார் திரு மணவை முஸ்தபா அவர்கள். அவர் முயற்சி மேலும் தொடர்ந்து வளம் பெற்று அவர் வழியில் இன்னும் பலர் மருத்துவத் தமிழ் நூல் களை இயற்றித் தமிழ் மொழி ஏற்றத்தை விரைவில் எய்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாகவும் இருக்கும். அவர் முயற்சியும் அவரால் தூண்டப்பட்டு மேலும் பலர் செய்யப் போகும் முயற்சிகளும் வெற்றி பெற வேண்டி வாழ்த்துவோம்.

பேராசிரியர் டாக்டர் லலிதா காமேசுவரன்,

துணைவேந்தர், ரீ ராமச்சக்திரா நிகர் நிலைப் பல்கலைக்கழகம், மற்றும் உறுப்பினர். மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு அரசு.