பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


19

சிதைவுறுத்து மருந்து : உரிய காலத்திற்கு முன்பு கருப்பையிலிருந்து கருவை வெளியேற்றுவதற்குத் தூண்டுகிற அல்லது வினையூக்கம் செய்கிற ஒரு மருந்து.

abortion : கருச்சிதைவு : கருப்பையில் ஒரு கரு ஒரு வடிவம் பெறுவதற்கு முன்னரே அதனைக் கருப்பையிலிருந்து வெளியேற்றி விடுதல். சூல் கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் கரு சிதைதல்.

abortus : சிதைவுற்ற கரு : சிதைவுற்ற அல்லது சிதைவுறுத்தப்பட்ட கரு. இது 500 கிராமுக்கும் குறைவான எடையுடன் இருக்கும். இது இறந்து போனதாகவோ அல்லது உயிர் பிழைக்க இயலாததாகவோ இருக்கும்.

abrasion : சிராய்ப்பு; தோற்காயம் : சுரண்டுதல் அல்லது உராய்தல் மூலம் தோலில் அல்லது சளிச்சவ்வில் ஏற்படும் மேற்காயம் அல்லது தோல் உரிதல். தழும்புள்ள திசுவினை நீக்குவதற்கு மருத்துவ முறையில் இது பயன்படுத்தப்படும்

abreaction : சோக நினைவின் எதிர்விளைவு; அக எதிரியக்கம்; மன உட்கிடக்கைத் திறப்பு : கடந்த கால வேதனை மிகுந்த அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் ஏற்படும் ஒருவகை உணர்ச்சித் தூண்டுதல். இது, உளவியல் பகுப்பாய்வின் போது அல்லது இலேசான மயக்க நிலையின் போது அல்லது மருந்துகளின் பாதிப்பின்போது பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகிறது.

abruptioplacenta : கருக்குடை விலகல் :

abscess : சீழ்க்கட்டு; கழலை; கட்டி : சீழ் உருவாக்கும் உயிரிகள் ஓர் உறுப்பெல்லைக்குள் உண்டாக்கும் சீழ்த் தொகுப்பு. இது தீவிரமானதாகவோ நாட்பட்டதாகவோ இருக்கலாம்.

acalulia : கணிப்புத்திறன் குறைபாடு : மிக எளிமையான கணக்குகளைக் கூடச் செய்ய இயலாதிருத்தல்.

acatalasia : செரிபொருள் வினையின்மை : செரிமானப் பொருள் வினையூக்கம் இல்லாதிருப்பதாக மரபணுவியல் முறைப்படித் தீர் மானிக்கப்பட்ட ஒரு குறைபாடு இது வாய்வழியான சீழ்த்தொற்றுக்கு முன்பே எளிதில் ஆளாகும் நிலையை ஊட்டுகிறது.

accident : ஏதம்; விபத்து; திமர் நேர்வு; தற்செயல் நிகழ்வு :

accidental haemorrhage : திடீர் நேர்வில் குருதி சிந்தல் :

acclimatation : சூழல் ஏற்புடல் : புதிய தட்ப வெப்ப நிலைக்கேற்ப உடல் பழகிக் கொள்ளல்.

acclimation : சூழல் ஏற்பு :

acclimatization : சூழல் இணக்கம் :

accomodation of eye : கண் சீரமைவுத்திறன்; ஏற்பமைவு : ஆடியின் புறக்குவி வினை பொருள்கள் அருகிலிருப்பதை அல்லது தொலைவிலிருப்பதைப் பொறுத்து மாற்றிக் கொள்வதற்குக் கண்ணுக்குள்ள ஆற்றல். இதனால், எப்போதும் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது.

accoucherylent : மகப்பேறு; பிள்ளைப்பேறு; பிரசவம்; மகப்பேற்று நிலை :

accoucheur : பேறுகால மருத்துவர் : பிளளைப்பேறு பார்ப்பதில் தேர்ந்தவர்; தாய்மை மருத்துவ வல்லுநர்.

accouheuse : பேறுகால மருத்துவச்சி : தாய்மை மருத்துவத்தில் தேர்ந்த பெண்.