பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


acetic acid : அசிட்டிக் அமிலம் (புளிங்காடி): புளிக்காடியில் உள்ள அமிலம். மூன்று வகை அசிட்டிக் அமிலங்கள் மருத்துவத் தில் பயன்படுத்தப்படுகின்றன. (1) உறைநிலை அசிட்டிக் அமிலம். இது சில சமயம் கடுங்காரமாகப் பயன் படுத்தப்படுகிறது. (2) சிறுநீர்ச் சோதனைகளில் பயன்படுத்தப்படும் சாதாரண அசிட்டிக் அமிலம். இருமல் மருந்துகளில் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.

acetoacetic acid : அசிட்டோ அசிட்டிக் அமிலம் : ஒரே உப்பு மூலமுடைய , அதாவது நீக்கி நிரப்பக்கூடிய ஹைட்ரஜன் ஒன்றுடைய ஒரு கரிம அமிலம். மனிதர் உடலில் கொழுப்புப் பொருள்கள் ஆக்சிகரமாகும்போது ஓர் இடைநிலையில் இது உற்பத்தியாகிறது. இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல் அல்லது நீரிழிவு போன்ற சில வளர்சிதை மாற்றக் கோளாறுகளில், இது இரத்தில் அளவுக்கு மீறி இருந்து, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. சிறு நீர் வெளியேறாமல் இருந்தால், இது அசிட்டோனாக மாறுகிறது. இரத்தத்தில் இந்த அமிலம் அளவுக்குமேல் இருக்குமானால், எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்க நிலை உண்டாகிறது.

acetohexamide : அசிட்டோ ஹெக்சாமைடு : வாய வழி உட் கொள்ளப்படும், நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு மருந்து.

acetomenaphthone : அசிட் டோமொனாஃப்தோன் வைட்டமின K என்ற ஊட்டச்சத்தின் ஒரு செயற்கை வடிவம். வாய்வழி உட்கொள்ளும்போது தீவிரமாகச் செயற்படுகிறது. மஞ்சட் காமாலை நோயைக் குணப்படுத்துவதற்கும், நோய்த்தடுப்பு மருத்துவத்தில் பிறவி இரத்தப்