பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

போக்குக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

acetonaemia : அசிட்டோனேமியா; அசிட்டோனிரத்தம் : இரத்தத்தில் அசிட்டோன் பொருள்கள் கலந்திருத்தல்.

acetone : அசிட்டோன் : உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம். இது எளிதில் தீப்பிடிக்கக்கூடியது.

acetonuria : அசிட்டோனூரியா; அசிட்டோன் நீரிழிவு : சிறுநீரில் அளவுக்கு மேல் அசிட்டோன் பொருள்கள் இருத்தல். இதனால் இனிப்பான மணம் உண்டாகிறது.

acetylcholine : அசிட்டில் கோலின் : தசையின் ஊனீர் சுரப்பிகளையும், மற்ற நரம்பு உயிரணுக்களையும் வினைபுரியத் தூண்டுவதற்காக நரம்பு முனைகளிலிருந்து வெளியாகும் வேதியியல் பொருள். இதனை வெளியிடும் நரம்பு இழைகள் 'கோலின் இழைகள்' எனப்படும். நரம்பு முனை களைச் சுற்றிலும், இரத்தத்திலும் பிற திசுக்களிலும் இருக்கும் அசிட்டில் கோலின ஸ்டெராஸ் எனப்படும் செரிமானப் பொருளினால் (என்சைம் ) கோலின், அசிட்டிக் அமிலம் ஆகியவற்றினுள் இது சேர்க்கப்படுகிறது.

acetylcysteine : அசிட்டில் சிஸ்டைன் : சிறுநீர்ப்பை இழை அழற்சியில் உள்ள குழம்பு நீர்ப்பொருள்.

acetylsalicylic acid : அசிட்டில் சாலிசிலிக் அமிலம் : உணர்ச்சியின்மை உண்டு பண்ணுகிற அல்லது நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மென்மையான மருந்து. ஏராளமான நோவகற்றும் மாத்திரைகள் தயாரிக்க அடிப்படைப் பொருளாகப் பயன்படுகிறது.  'ஆஸ்பிரின்' என்பது இதன் அதிகாரபூர்வமான பெயர்.

achalasia : உணவுக் குழாய் அலை விழப்பு; தளர்விழப்பு; தளராமை : தசை நரம்புகளைத் தளர்வுறுத்தத் தவறுதல்.

achilles tendon : குதிகால் தசை நார்; குதிகாண் : குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள இளக்க மற்றும் கெண்டைக்கால் புடைப்புத் தசைகளின் தசைநாண் முனை.

achillotomy : குதிநாண் வெட்டு :

achlorhydria : ஹைடிரோ குளோரிக் அமிலமின்மை : வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இல்லாதிருத்தல். மரணம் விளைவிக்கும் இரத்தசோகை. இரைப்பைப் புற்று ஆகிய நோய்களின் போது இந்நிலை தோன்றும்.

acholia : பித்த நீரின்மை :

acholuria : அக்கோலூ ரியா; பித்தமற்ற நீரிழிவு : சிறுநீரில் பித்த நீர் நிறமி இல்லாதிருத்தல்.

achondroplasia : எலும்பு வளர்ச்சித் தடை; குறுத்து வளராமை : நீண்ட எலும்புகளின் வளர்ச்சி தடைபட்டு, பெரிய தலையும் குறுகிய உறுப்புகளும் கொண்ட குள்ள உருவம உருவாதல், இது பரம் பரையாக வரும் ஒரு பண்பு இதில் அறிவுத்திறன் பாதிக்கப்படுவ தில்லை. பாரம்பரியப் பண்பு மேலோங்கியிருக்கிறது.

achroma : இயல்புநிறமின்மை :

achromatopsia : நிறக்குருடு; நிறப்பார்வையின்மை : வண்ணங்களை முழுமையாக அடையாளங்காண இயலாதிருத்தல். இந்நோய் பிடித்தவர்களுக்கு ஒரே நிறம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும்.

achromycin : அக்ரோமைசின் : 'டெட்ரோசைக்கிளின்' என்ற