பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

சுரக்கும் உயிரணுக்கள் கொண்ட உடற்பகுதி. பல ஊனீர் சுரப்பு இழைகள் சேர்ந்து ஒரு சிறு இதழாக அமைகின்றன.

acme : நோய் உச்சநிலை; நோயின் நெருக்கடி : ஒரு நோய் மிக முற்றிய உச்சநிலை.

acmesthesia : கூர்தொடுவுணர்வு :

acne, acne vulgaris : முகப்பரு : ஆண்பால் இயக்கு நீர்மங்களின் (ஆண்ட்ரோஜன்) சுற்றோட்டத்தினால் மயிர்ப்பை நெய்மச் சுரப்பிகள் அளவுக்குமேல் தூண்டப்படுவதாலும் மயிர், கொம்பு, நகம் போன்றலை உருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள் (கெராட்டின்) அடைப்பட்டு, மயிர்ப்பை நெய்மம் (செபம்) அளவுக்கு அதிகமாகச் சேர்வதாலும் உண்டாகும் நிலை. பின்னர், தோல் பாக்டீயாக்கள் அடைப்பட்ட மயிர்ப்பை நெய்மத்தை அரிப்பு உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இந்த அமிலங்களே வீக்கத்திற்கும், கொப்புளம் உண்டாவதற்கும் காரணமாகின்றன. இதைக் குணப்படுத்த 'மானோ சைக்ளின்' மருந்தைப் பயன்படுத்தலாம்.

acne vulgaris : முகப்பரு : முகத்தில் ஏற்படும் சிறுசிறு கட்டிகள்.

acology : மருந்து மருத்துவ இயல் : மருந்து தொடர்பான மருத்துவத் துறைத் தனி இயல்

acquired immune deficiency syndrome(AIDS) : ஈட்டிய நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய் (எய்ட்ஸ்) : இது மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க் கிருமியினால் (Human Immune Deficiency Virus-HIV) உண்டாகிறது. இந்தக் கிருமி, நலிவுறுத்தும் கிருமிக் குழுமத்தைச் சேர்ந்தது. இது நான்கு கட்டங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது; (1) நோய் எதிர்ப்புப்பொருள் இது கிருமியைக் கொண்டுசெல்லும் பொருள். இந்நிலையில் இந் நோய் பீடிக்க 10% வாய்ப்புகள் உண்டு. (2) தொடர்ந்து நீடிக்கும் பொது நிணநீர் கொண்டு செல்லும் பொருள். இந்த நிலையில், புறநோயாளிகளுக்கான சிகிச்சை தேவை. (3) 'எய்ட்ஸ்' நோய் தொடர்புடைய , நெஞ்சுவலி, பேதி, படிப்படியாக அதிகரிக்கும் மனச் சீர்கேடு போன்ற சிக்கல்கள் தோன்றுதல். (4) குணப்படுத்த முடியாத முழுமையான 'எய்ட்ஸ்' நோய்.

acri flavine : அக்ரி ஃபிளேவின் : ஆற்றல் வாய்ந்த நோய் நுண்ம அல்லது நச்சுத் தடைப்பொருள் இது காயங்களுக்கு 1:1000 கரைசலாகவும் ; நமைச்சலுக்கு 1-1000 முதல் 1-8000 வரையிலான கரைசலாகவும் பயன்படுத்தப்படுகிறது. அக்ரிஃபிளேவின் பால்மம், மென்மையான, ஒட்டிக் கொள்ளாத காயங்களுக்குக் கட்டுப்போடக் கூடிய ஒரு மருந்து. இதில் திரவ கன்மெழுகு (பாரஃபின்) அடங்கியுள்ளது. புரோஃபிளேவின், யூஃபிளேவின் இரண்டும் ஒரே மாதிரியான கூட்டுப் பொருள்கள்.

acrocephalia : கூம்புத்தலை : இது பிறவியிலேயே அமையும் பொருத்தமில்லா உருவக்கேடு. இதில், அம்புத்தலை வடிவ மற்றும் தலை ஓட்டின் மூலம் முகட்டெலும்பையும் பின் முகட்டெலும்பையும் இணைக்கும் பொருத்துவாயானது முதிர்வதற்கு முனபே மூடிக்கொளவதன் காரணமாகத் தலையின் உச்சி கூம்பாகவும், கண்கள் வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும்.

acrocephalosyndactyly : கூம்புத் தலை வாத்து விரல் : இது பிறவியிலேயே அமையும் ஓர் உருவக்கேடு இதில், தலையின் உச்சி கூம்பு வடி