பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

விலும், கைவிரல்களும் பாதவிரல்களும் வாத்தின் கால்லிரல்களைப் போன்று இடைத் தோலினால் ஒன்றுபட்டிணைந்தும் இருக்கும்.

acrocyanosis : கைகால் நீலம் பூத்தல் : ஆக்சிஜன் சரிவர ஊட்டப்பெறாத இரத்தம் சுழல்வதன் காரணமாகக் கைகால் பகுதிகள் நீலம்பூத்து இருக்கும் நோய் வகை.

acrodormatitis : கைகால் தோல் அழற்சி :

acrodynia : கைகால் சிவப்பு : தோல் நரம்புக் கோளாறில் கை கால் பகுதிகளில் வேதனை தரும் அளவுக்குச் சிவப்பு நிறமாதல்.

acromegaly : உறுப்பு அகற்சி; புறமுனைப் பருமன் கபச் சுரப்பி நோய் : குருதியில் கலந்து உறுப்புகள் செயற்படத் தூண்டும் உட்சுரப்பு இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு மேல் சுரப்பதால், கைகள், பாதங்கள். முகம் ஆகியவை அளவுக்கு மீறி அகன்று விடுதல். குழந்தைகளிடம் இது அரக்க உருத் தோற்றத்தை உண்டாக்குகிறது.

acromicria : உறுப்புக் குறுக்கம் : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய தூம்பற்ற மூளையடிச் சுரப்பியிலிருந்து (கபச்சுரப்பி ) சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) குறைவாகச் சுரப்பதன் காரணமாக கைகள், கைகால் பாதங்கள் ஆகியவை சிறுத்துவிடுதல் அல்லது குறுகிவிடுதல்.

acromion process : தோள் திருகு நோய் : தோள்பட்டை எலும்பின் ஒரு பகுதி சற்றே பின்புறமாகத் திருகி இருத்தல்.

acroparaesthesia : கை மரமரப்பு : கைகளில் உட்கூச்செறிவும் மரமரப்பும் ஏற்படுதல்

acrylics : உறுப்பு ஒட்டுப்பசைகள் : உடம்பில் செயற்கை உறுப்புகள் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும், வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பொருள்களின் தொகுதி.

acthargel : அக்தார் கூழ் : இது கூழ்ப்போன்ற அரைத் திணமக் கரைசலாகவுள்ள ஓர் 'அக்த' தயாரிப்பு. இது குண்டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன்படுத் தப்படுகிறது. தோல்படை நோய், தோல் தடிப்பு நோய், கீல்வாத மூட்டு வீக்கம், ஒவ்வாமை நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

actified : ஆகடிஃபெட் : சியூடோஃபெட்ரின், டிரிப்ரோலிடின் ஆகியவை அடங்கிய மருந்து.

acting out : துன்ப உணர்வுக் குறைப்பு : உணர்ச்சி வயப்பட்ட மனவேதனையைக் குறைத்தல். இதில் முந்தைய மனக்குழப்பங்கள், மனப்போக்குகள் மூலம் தன்னையறியாமல் ஏற்பட்டுவிட்ட தடுமாற்றமான அல்லது மூர்க்கத்தனமான நடத்தையிலிருந்து நோயாளி விடுவிக்கப்படுகிறார்.

actinic dermatoses : ஒளிக் கதிர்த்தோல் அழற்சி : தோலின் புறவூதா ஒளிபட்டால் இயல்புக்கு மீறி எளிதில் புண்படக் கூடியதாக இருத்தல்.

actinism : ஒளிக்கதிர் வேதியியல் விளைவு : ஒளிக்கதிரினால், முக்கியமாகப் புறவூதா ஒளிக்கதிரினால் உண்டாகும் வேதியியல் விளைவு.

actinobiology : ஒளிக்கதிர் உயிரியல்; ஒளிய உயிரியல் : உயிர்வாழும் உயிரிகளின் மீது ஒளிக்கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராய்தல்.

actinomyces : கதிர்வீச்சுப் பாக்டீரியா : ஒளிக்கதிர வீசும் பூசண வலையைக் கொண்ட பூஞ்சனம் போனற ஒட்டுண்ணிப் பாக்டீரியா. இதிலிருந்து பல்வேறு நோய்