பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


28

adenosis : சுரப்பி நோய்

adenotonsillectomy : மூக்கடி யான் - அடிநாத்தசை அறுவைச் சிகிச்சை : மூக்கடித்தசை வளர்ச்சி (மூக்கடியான்) அடிநாத்தசை மூலம் அகற்றுதல்.

adenovirus : சுரப்பிக் கிருமிகள் : ஊனீர்ச்சுரப்பு சார்ந்த 47 தனித் தனி வகைகள் அடங்கிய கிருமிகளைக் கொண்ட ஒரு டி என் ஏ (DNA) குழுமம். இந்த 47 வகைகளில் மனிதனிடம் 31 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விலங்கினங்களில் வேறு பல வகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் சில மேல் மூச்சுக் கோளாறுகளையும், வேறு சில சீத சன்னி அல்லது சளிக்காய்ச்சல எனனும் நிமோனியாக் காய்ச் சலையும், இன்னும் சில கொம்பு - நக அழற்சியையும் உண்டாக்குகின்றன.

adermine : ஆடாமின் : பைரி டாகசின், வைட்டமின் .

adexolin : அடக்சோலின் : A, D வைட்டமின்களின் கலவை.

adhesion : இருவேறு உறுப்பிணைவு, ஒட்டுகை : வீங்கிய இரு வேறு உறுப்புகளின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பிளவுற்ற பரப்பு இணைவு அடிவயிற்றில் இத்தகைய பிணைவினால் குடலில் அடைப்பு ஏற்படும். மூட்டுகளில் இது போன்ற பிணைவு. அசைவைக் கட்டுப்படுத்துகிறது. இரு மார்பு வரிப் பரப்புகளிடையிலான பிணைவு காரணமாக மார்புக் கூடு முழுமையாக இணைவதைத் தடுக்கிறது.

adiposs : உயிரினக் கொழுப்பு; கொழுப்பார்ந்த; கொழுப்பேறிய கொழுப்புக் குரிய; கொழுத்த. உயிரினக் கொழுப்புத் திசு அடங்கிய உயிரணுக்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறக் கொழுப்பு அடங்கியுள்ளது.

adiposity : கொழுப்புடைமை; கொழுப்பேற்றம் : உடலில் அளவுக்கு மேல் கொழுப்பு சேர்தல்.

aditus : அணுகுவாய்; அணுகுவழி: உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றி ஆராயும் உடல் உட்கூறியலில், அணுகுவதற்கான நுழைவா யில் அல்லது திறப்பு வழி.

adjuvant. துணை மருந்து; துணையம் : மற்ற மருந்துகளின் வினைகளுக்கு உதவி புரிவதற்காகச் சேர்க்கப்படும் துணை மருந்துப் பொருள். முதன்மையான மருத்துவச் சிகிச்சையுடன கூட இந்தத் துணை மருந்து அளிக்கப்படுகிறது

adler's theory : ஆட்லர் கோட் பாடு: "வலுவான தாழ்மை உணர்ச்சி காரணமாகவே நரம்புக் கோளாறுகள் உண்டாகின்றன என்னும் கோட்பாடு.

adnexa : அண்டை உறுப்பு : உடலில் ஓர் உறுப்புக்கு மிக நெருக்க மாகவுள்ள உறுப்புகள் அல்லது கட்டமைப்புகள்.

adrenal function tests : அண்ணீரகச் சுரப்பிச் சோதனை : குண்