பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Z zactirin : சாக்டிரின் : எத்தோ ஹெப்டாசின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

zantac : சான்டாக் : ரனிட்டிடின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

zarontin : சாரோன்டின் : இலேசான காக்காய் வலிப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எத்தோசக்சிமைடு என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

zastat : சாஸ்டாட் : நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மெட்ரோனிடாசோல் எனற மருந்தின் வாணிகப் பெயர். இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து.

zinacef : சினாசேஃப் :.ú : பெனிசிலினை எதிர்க்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுததப்படும் செஃபுரோக்சிம் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

zinamide : சினாமைடு : காசநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் பைராசினாமைடு என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

zinc : துத்தநாகம் : பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம் புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாதக குறைபாட்டினால், குருதிசோகை, குள்ள உருவம், மண் திண்ணும் பழக்கம் உண்டாகிறது.

zingibar : இஞ்சி : இஞ்சிக் கிழங்கு செடியின் வேர்.

zone: பட்டை வளையம்; புலம் : கை கால்களைத் தாங்கும் எலும்புப் பட்டை வளையம்.

zonula ciliaris : கண்ணிமை இழைப்பிழை : கண் விழியாடியின் புறப்பகுதியைக் கண்ணிமை மயிருடன் இணைக்கும் தொங்கு இணைப்பிழை.

zonule : பட்டை வளையம்; சிறு பகுதி : சிறு பட்டை வளையம்.

zonulolysis : கண்ணிமை இணைப்பிழை அழற்சி; நுண்புலமுறிவு: கண்ணிமை இணைப் பிழையில் ஏற்படும் வீக்கம்.

zoonosis : தாவு நோய்; விலங்கு வழி தொற்று நோய்; விலங்கிய நோய் : விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய். இறைச்சிக் கொட்டில்கள். பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்நோய் உண்டாகும்.

zoster : தேமல் : படர் தாமரை; அக்கி.

zygoma : கன்ன எலும்பு : கன்னத்தின் வளைவெலும்பு.

zygote : இருபாலணு இணைவுப் பொருள்.

zyme : புளிமா : நோய்க் கிருமி.

zymogen : சைமோஜன் : ஒரு செயல் திறமிக்க செரிமானப் பொருளின் (என்ஸைம்) முன்னோடிப் பொருள். இது அமிலப் பொருளால் செயலூக்கம் பெறுகிறது.

zymosis : புளிப்பூட்டம் : நுண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு.