பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


30 வாயுவை, திரவத்தை அல்லது திடப் பொருளைக் கரைசலாகவோ மிதவலாகவோ உறிஞ்சி வைத்துக் கொள்வதற்கு ஒரு பொருளுக்கு உள்ள பண்பு.

advancement: மாறுகண் அறுவைச் சிகிச்சை : மாறுகண் பார்வையைச் (ஒருக்கணிப்புப் பார் வை) சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில், ஒருக்கணிப்புத் திசைக்கு எதிரிலுள்ள தசை நாண்களைப் பிரித்தெடுத்து. வெள் விழிக் கோளத்தின் புறத் தோலுடன் பொருத்தித தைத்து விடுகிறார் கள்.

adventitia : குருதி நாளப் புறத்தோல் ; குருதிக் குழாய் வெளிப்படலம் : இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் அல்லது இதயத்திற்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையின் மேலுறைத் தோல்.

adynamia : உயிராற்றல் அழிவு படுகிடை நிலை.

AEG : காற்று மூளை இயக்கப் பதிவு மூளையின் இயக்கத்தை ஒரு காற்றுக் கருவி மூலம் பதிவு செய்தல்.

aeration : காற்றூட்டல் : காற்றூட்டம் : உயிர்ப்பு மூலம் குருதி யுடன ஆக்சிஜன கலக்கும்படி செய்தல்.

aerobe : ஆக்சிஜன் உயிரி; உயிர் வளி உயிரிகள் ; காற்றுயிரி : உயிர் வாழ்வதற்கு ஆகசிஜன் (0) தேவைப்படுகிற ஓர் நுண்ணுயிரி

aerobiology : ஆக்சிஜன் உயிரியல், உயிாவளி உயிரியல : காற்றில கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகள் நுண்ணணுச் சிதல்கள் ஆகியவை பற்றிய உயிரியல் துறை

aerobiosis : ஆக்சிஜன் வழி உயிர் வாழ்வு : ஆக்சிஜனைக் சுவாசித்து உயிர் வாழ்க்கை நடத்துதல்.

aerogenous : காற்று உற்பத்தி செய்கிற.

aerophagia, aerophagy : காற்று மிகை ஈாப்பு : காற்றினை அள வுக்கு மிகுதியாக உள்ளே ஈர்த்துக் கொள்ளுதல்.

aerophobia : கடுங்காற்றச்சம்.

aerosol : தூசிப்படலம் : புழுதிப் படலம் ; வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல் இத னால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. எடுத்துக்காட்டாக. தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசி யில் நுணமங்களை (கிருமிகள்) நீக்குவதற்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தோலில் தெளிப்பதற்கும் சிலவகை தூசித் தெளிப்பான்கள் பயன்படுகின்றன.

aerosporin; ஏரோஸ்போரின் : 'பாலிமிக்சின் -B' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

aesculapius ஏஸ்கலபியஸ் : ரோமானியரின் மருத்துவக் கடவுள்.

aetiology. நோய்முதல் ஆய்வியல் ; நோயக்காரண ஆயவியல்; நோய்க் காரணவியல் : நோய்க் காரணம் பற்றி ஆராயும் அறிவியல் துறை.

afebrile : காய்ச்சலின்மை ; காய்ச் சலற்ற.

affect ; செயல் தூண்டுணர்ச்சி; தாக்கம் : உடல் உணர்ச்சியின் இன்ப துன்பநிலை.

affection: உணர்வு நிலை; உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்போக்கு. மனநிலை அல்லது உணாச்சி.

affective : உணர்ச்சி சார்ந்த : உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்