பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

afterpains:பின்நோவு:மகப்பேற்றுக்குப் பின்பு,கருப்பைத் தசை இழைகள் சுருங்குவதன் காரணமாக உண்டாகும் நோவு.

agalactia:தாய்ப்பால் சுரப்பின்மை;பால் சுரக்காமை:மகப்பேற்றுக்குப் பிறகு தாயிடம் தாய்ப்பால் சுரக்காமல் இருத்தல் அல்லது குறைவாகச் சுரத்தல்.

agammaglobulina e mia:தொற்று நோய்த் தடைக் காப்பின்மை:இரத்தத்தில் 'காமா குளோபுலின்' இல்லாதிருத்தல்.இதனால் நோய்த் தொற்றினைத் தடுக்கும் திறன் இல்லாமல் போகிறது.

aganglionosis:நரம்புக் கணு இன்மை: மங்கிய சாம்பல் நிற மாப்பொருள் நிரம்பிய நரம்பு மண்டலமையங்கள் இல்லாதிருத்தல்.

agar:கடற்கோரைக் கூழ் (அகர்;அகர்-அகர்):கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.இது,பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.

age:முதுமை;அகவை;வயது:வாழ்நாள்; ஆயுள்;வயது;பருவம் முதிர்ச்சி,இது உள்ள முதிர்ச்சி;உடல் முதிர்ச்சி என இருவகைப்படும்.

ageism:முதிர்ச்சி வகைப்பாடு:கால வரிசைப்படியான வயதுக்கிணங்க மக்களை வகைப்படுத்துதல்.ஆக்கமுறையான அம்சங்களை விட்டு விட்டு,எதிர்மறை அம்சங்களுக்கு அளவுக்குமேல் முக்கியத்துவம் கொடுத்தல்.

agenesis:குறை வளர்ச்சி:உறுப்பு வடிவு பெறாமை.முழுமை பெறாத வளர்ச்சி.

agglutination:குருதியணு ஒட்டுத்திரள:ஒட்டுத்திரட்சி:முன்னர் நோயுற்ற ஆளின் அல்லது விலங்கின் குருதி நிண நீரில் (சீரம்)உருவான அணு ஒட்டுப் பொருள்கள் (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்களினால் பாக்டீரியா,சிவப்பணுக்கள் அல்லது உயிர்த்தற்காப்புப்பொருள் துகள்கள் ஒன்றாகத் திரண்டு கெட்டியாதல். ஆய்வுக்கூடங்களில் பல பரிசோதனைகளுக்கு இது அடிப்படையாக அமைந்துள்ளது.

agglutinogen:அணு ஒட்டுப் பொருள்; ஒட்டுத் திரட்டி:அணு ஒட்டு பொருள்கள் (அக்ளுட்டின்)எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிற ஓர் உயிர்த் தற்காப்புப்பொருள் (ஆண்டிஜன்). இது தொற்று நோய்களிலிருந்து முழுத் தடைக்காப்பு அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.எடுத்துக்காட்டு: ஊசி மருந்திலுள்ள இறந்துபோன பாக்டீரியா; நச்சுக் கொல்லிகளிலுள்ள தனிவகைப் புரதம்.

aggrassin:பாக்டீரியா முனைப்பு வினை: சிலவகைப் பாக்டீரியாக்கள்;தங்களின் ஒட்டுண்ணி ஆதார விலங்குகளுக்கு எதிரான தங்களது வலுத்தாக்குதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்காக உற்பத்தி செய்யும் ஒருவகை வளர்சிதை மாற்றப்பொருள்

aggression:வலுச்சண்டையுணர்வு:தன் முனைப்பு நடத்தை:வலியச் சண்டைக்குச் செல்ல முனையத் தூண்டும் கோப உணர்வு அல்லது பகையுணர்வு.

agitated depression:கிளர்வூட்டும் மனச்சோர்வு :கடும் மனச்சோர்வும் அச்சவுணர்வும் நிறைந்த இடையறாத மனவுலைவு நிலை.எளிதில் உணர்ச்சிவயப்படும் பைத்திய நிலையில் இது உணடாகிறது.

aglossia:நாக்கு இன்மை