பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

alastrim . சின்னம்மை : பெரியம்மை நோயை விடச்சற்று கடுமை குறைந்த அம்மை நோய்.

albinism : பாண்டு நோய். வெள்ளுடல் நோய்; பெரு வெண்மை : பிறவியிலேயே இயல்பான நிறமி கள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத் தைப் பார்த்தால் கண்கூசும். விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு.

albino (albinass) . பாண்டு நோயாளி ; வெண்குட்டம் : பாண்டு நோய்க்கு ஆளானவர்.

albumin : கருப்புரதம் ; வெண்கரு : வெண்புரதம் : நீரில் கரையக்கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும் குருதி நிணநீரின் முதன்மையான புரதம்

albuminuria . வெண்ணீ ர் நோய்; வெண்புரத நீரிழிவு : சிறுநீரில் கருப் புரதம் இருக்கும் நோய், இந்நிலை தற்காலிகமாக இருந்து முழுவது மாக நீங்கி விடலாம்

albumose : அல்புமோஸ் : கருப் புரதத்தைப் போன்ற ஒரு பொருள். ஆனால், இது வெப்பத்தினால் கட்டியாவதில்லை

albumosuria : அல்புமோசூரியா : சிறுநீரில் அல்புமோஸ் இருக்கும் நோய்.

alcohol : ஆல்ககால் ; வெறியம், சாராயச்சத்து, மது. சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் வெறியச்சத்து இயக்கம் - உணர்ச்சி - சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்புவலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக ஊசி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இயல்பு நீக்கிய ஆல்ககால் (90% ஆல்ககால்), 'டிங்சர்' என்ற சாராயக் கரைசல் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. 95% ஆல்ககால் கொண்ட மெதிலேற்றிய சாராயம், புறப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. நோவகற்றும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

alcohol fast : நிறம் நீக்கி : பாக்டீரியாவியலில், நிறங்கெடும் போது, ஆல்ககாலினால் நிறம் நீங்குவதை எதிர்க்கும் ஓர் உயிரி.

alcoholism ஆல்ககால் நச்சுத்தன்மை ; சாராய மயககம் ஆல்ககாலுக்கு (போதைப் பொருள) அடிமையாவதன் விளைவாக உண்டாகும் நச்சுத்தன்மை . இது முற்றி விடும்போது, நரம்பு மண்டலமும், சீரண மண்டலமும் சீர்குலைகிறது.

alcoholuria . ஆல்ககாலூரியா; சிறுநீரில் சாராயம் : சிறுநீரில் ஆலககால இருத்தல், ஆல்ககால் அருந்திய பின் ஊர்தி ஓட்டுவதற்குத் தகு நிலையுள்ளதா என்பதற்கான ஒரு சோதனைக்கு இது அடிப்படையாகும்

alcopar அல்கோபார் : பெஃபினி யம் ஹைட்ரோக்சைனாஃதோயேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

alcuronium. அல்குரோனியம் : ஒரு செயற்கைத் தசைத்தளர் வறுத்துப்பொருள். இது 'டுயூ போகுராரின்' என்ற மருந்தினைப் போன்ற பண்புகளையுடையது. ஆனால், சிறிதளவுகளில் உட் கொள்வதால் மட்டுமே இது பயனளிக்கும்.

aldactone A : அல்டாக்டோன் A : ஸ்பிரோனோலாக் டோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.