பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 aldolaso test : அல்டோலாஸ் சோதனை : ஒரு செரிமானப் பொருள் (என்சைம் ) சோதனை. தசையைப் பாதிக்கும் நோயில், குருதி நிணநீர்ச் செரிமானப் பொருள் அல்டோலாஸ் அதிகமாக இருக்கும்.

aldomet : அல்டோமெட் : 'மெதில் டோப்பா' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

aldosterone : அல்டோஸ்டெரோன் இயக்கு நீர் : குண்டிக்காய்ச் சுரப்பிப் புறப்பகுதியில் சுரக்கும் நீர். இது, சிறுசிரக நுண்குழாய் கள்மீது செயற்படுவதன் மூலம் மின்பகுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இது கனிமச் சுரப்புப் பொருள் என்று அழைக்கப்படுகிறது. இது பொட்டாசியம் வெளியேறுவதை அதிகரிக்கிறது. சோடியம் குளோரைடைச் சேமித்து வைக்கிறது.

aldosteronism: அல்டோஸ் டெரோன் மிகைப்பு நோய்: அண்ணீரகச் சுரப்பிப் புறப்பகுதியில் ஏற்படும் கட்டிகளினால் உண்டாகும் நிலை. இதில், மின்பகுப்பு நீர்மப் பொருள் சமநிலையின்மை ஏற்பட்டு, முறை நரப்பிசிவு உண்டா கிறது.

aleudrin : அலூட்ரின் : ஐசோப்ரனலின் சல்ஃபேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

alexia : சொற்குருடு ; படித்துப் புரியும் உணர்வின்மை : பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளை நோய். கல்வியின் தொடக்க நிலையில் ஏற்படும் மூளை நைவுப்புண் அல்லது புலனுணர்வுப் பற்றாக்குறை காரணமாக இது ஏற்படும்.

alexin: குருதிப்புரதம் (அலக்சின்) : குருதியில் நோயணுக்களை அழிக் கும் திறனுடைய புரதம்.

alexipharmic : நச்சு மாற்று மருந்து : நஞ்சுக்கு மாற்றாக அளிக்கப்படும் மருந்து.

alfentamil: ஆல்ஃபென் தமிழ் : நோவுணர்ச்சி அகற்றும் மருந்து. இது மார்ஃபின்' என்ற அபினிசி சத்துப் பொருள் போன்றது.

algesia : மிகை வலியுணர்வும் அதி வலியுணர்வு : அளவுக்கு மீறிய வலி யுணர்வு;. அபரிமிதமான நரம் புணர்ச்சிக் கோளாறு.

algesimeter : வலியுணர்வு மானி : வலியை உணரும் திறனளவைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி.

algidty : சன்னி குளிர் : கடுமையான காய்ச்சல், குறிப்பாக முறைக் காய்ச்சல் (மலேரியா ) நிலை. இந்நிலையின் போது, குத வழி வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

alginates : அல்ஜினேட்டுகள் : கடற்பாசி வழிப்பொருள்கள். இவற்றை உறுப்பெல்லைக்குட் பட்டுப் பயன்படுத்தும் போது. இரத்தத்தை மூடிக்கொள்கின்றன. அல்ஜினேட்டுகள் கரைசலாகவும், செறிவுறுத்திய மென்வலையாக வும் கிடைக்கின்றன.

alidine : அலிடின் : 'அனிலரிடின்' என்ற மருந்தின் வாணிகப்பெயர்.

alienation : மனமுறிவு : உளவியல் முறையிலும், சமூகவியல் முறையிலும் மக்களிடமிருந்து மன முறிவு கொள்ளுதல். alimentary : உணவூட்டம் சார்ந்த ஊட்ட உணவு ஊணேற்பு :

alimentation : உணவூட்ட மனித் தல்: உணவு ஏற்றல் ; இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற உணவூட்ட மளித்துப் பேணுதல்.

alkali: காரப்பொருள் வன்காரம் காரம் : சோடா, பொட்டாஷ், அம்மோனியா போன்ற கரையக்