பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 அறிகுறியை உண்டாக்கக் கூடிய உயிர்த் தற்காப்புப் பொருள்.

allergy: ஒவ்வாமை உடலில் அயற்பொருள் நுழைவின் விளைவாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர் விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எதிர்விளைவுகள், காஞ்சொறித் தடிப்புகள். மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் (ஆஸ்துமா) போன்றவை சில ஒவ்வாமை நோய்கள்.

allocheiria : இயல்பு மீறிய ஊறுணர்வு : தொட்டறியக்கூடிய உணர்வு இயல்புக்கு மீறியதாக இருத்தல். இதனால் நோயாளியின் உடலில் அளவு கடந்த தொடுவுணர்வுத் தூண்டுதல் ஏற்படுகிறது. allograft : உறுப்பு மாற்று அறுவை மருத்துவம் ; ஒரினத்திசு ஒட்டு: ஒருவரிடமிருந்து ஒரே வகை உறுப்பு மாற்று உயிர்த்தற்காப்புப் பொருள்களைக் கொண்டிராத இன்னொருவருக்கு ஓர் உறுப்பினை அல்லது திசுவினை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம்,

allopath (allopathist): எதிர் முறை' மருத்துவர்

allopathic : எதிர்முறை' மருத்து வம் சார்ந்த : நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புகள் ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்தும் மருத்துவ முறையைச் சார்ந்த.

allopathy: 'எதிர்முறை' மருத்து வம் : நோய்க் கூறுகளுக்கு எதிர்க் கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்கும் மருத்துவ முறை.

allopurinol : அல்லோபூரினால் கரையாத சிறுநீர் (யூரிக்) அமிலத்தி பிருந்து படிகப்படிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள்

37

இது கீல்வாத (சந்துவாதம் அலலது ஊளைச்சதை நோய் ) நோயில் கீல்வாத நீரைக் (டோஃபஸ்) குறைக்கிறது. கீல்வாதம் அடிக்கடி வருவதைக் கணிசமாகக்குறைப்பதுடன், அதன் கடுமையினையும் குறைக்கிறது. தோல் பகுதியில் வேனற்கட்டி உண்டாக்குகிறது.

aloes : கற்றாழை இலைச்சாறு : சோற்றுக் கற்றாழை என்னும் வெப்பமண்டலத்தாவரத்திலிருந்து பறித்த இலைகளிலிருந்து எடுக்கப்படும் வற்றிய சாறு. கடும் கசப்புச் சுவையுடையது. ஆற்றல் வாய்ந்த பேதி மருந்து

alopecia : தலை வழுக்கை ; வழுக்கை, மயிர்க்கொட்டு; சொட்டை : தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை . எனினும், அதிர்ச்சியும் கவலையும் வழுக்கை ஏற்படத் தூண்டும் பொதுவான காரணிகள் என்பன.

alophen: அலோ ஃபென் : 'ஃபினோல்ஃப்தலீன' என்ற மருந் தின வாணிகப் பெயர்

aloxiprin : அலோக்சிபரின் : அலுமினியம் ஆஸ்பிரின் மருந்தின் ஒரு கூட்டுப் பொருள். இது ஆஸ்பிரினைவிடக் குறைந்த அளவில் குடல் எரிச்சல் உண்டாக்குகிறது. சிறுகுடலில் உடைந்து ஆஸ்பிரினை வெளியேற்றுகிறது

alpha-chymotrypsin : ஆல்ஃபா கைமோட்ரிப்சின் : கண அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கணையச் செரிமானப் பொருள் (என்சைம்) இது, பொதியுறைத் தசை நார்களைக் கரைத்து, கணணின் பாவை வழியாகக் காயத்தி