பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தும் வினையைப் புரிகிறது. இது பிளாஸ்மினோஜன் வினையூக்கிகளின் செயலைத் தடை செய்கிறது.

aminocrine - அமினோக்ரைன் : அக்கிஃப்ளேவின் போன்ற கறைப்படுத்தாத ஒரு நோய் நுண்ம (கிருமி) ஒழிப்புப் பொருள்.

aminoglutethimide : அமினோகுளுட்டித்திமிட் : இயக்குநீரை (ஹார்மோன்) சார்ந்த புற்று நோய்களில் அண்ணீரகச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீரை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.

aminophylline: அமினோஃபைலின் : எத்திலின் டயாமின் கலந்த தியோஃபைலின். இது தியோஃபைலினிலிருந்து எடுக்கப்படும் ஒரு வழிப்பொருள் ; கரையக் கூடியது. ஈளை நோய் (ஆஸ்த்துமா ) குருதியின் அடர்த்தி மிகுதியினால் ஏற்படும் மாரடைப்பு . நெஞ்சுப்பை இழைம அழற்சி ஆகிய நோய்களைக் குணப்படுத்தப் பயன் படுத்தப்படுகிறது.

aminoplex : அமினோப்ளக்ஸ் : நரம்பு வழி உட்செலுத்துவதற்கு உகந்த ஒரு செயற்கைத் தயாரிப்பு மருந்துப் பொருள். சாதாரணமாகப் புரதமாக உட்செலுத்தப்படும் கரிம அமிலங்களை (அமினோ அமிலங்கள்) இது கொண்டிருக்கிறது இது காயங்களைக் கழுவிக் குணப்படுத்தப் பயன்படுகிறது. aminosalicylic acid : அமினோ - சாலிசிலிக் அமிலம் : காசநோயை (எலும்புருக்கி நோய் -டி.பி. குணப்படுத்துவதற்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்து.

aminosol : அமினோசோல் : கரிம அமிலங்களின் (அமினோ அமிலங்கள்) ஒரு கரைசல். இது குளூக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்ககால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய்வழியாகவோ, நரம்பு வழியாகவோ செலுத்தலாம்.

amitosis : உயிரணுப் பகுப்பு: உயிரணுப் பிளவு : ஓர் உயிரணு , நேரடிப் பிளப்பு மூலம் பகுதிகளாகப் பிரிவுறுதல்.

amitriptyline : அமிட்ரிப்டிலின் : முச்சுழறசியுடைய வலி தணிப்பு மருந்து. இது 'இமிப்ராமின் மருந்தினைப் போன்றது. இதில் ஒருவகை நோவாற்றும் விளைவு உண்டு. இது குழப்பத்துடன் கூடிய மனத் தளர்ச்சியின்போது மிகவும் பயன்படுகிறது.

ammonia : நவச்சார ஆவி (அம்மோனியா): நைட்ரஜனும் ஹைட்ராஜனும் இணைந்து இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கூட்டுப் பொருள். மனிதர்களிடம் நவச்சார வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்து ஏற்படும் பல்வேறு பிழைபாடுகள் காரணமாக மன வளர்ச்சிக் குறைபாடு, நரம்புக் கோளாறுகள், வாத சன்னி போன்ற திடீர் நோய்ப் பீடிப்புகள் உண்டாகின்றன. நவச்சார ஆவிக்கரைசல் நிறமற்ற திரவம் காரநெடியுடையது. இது சிறுநீர்ச் சோதனையில் பயன்படுத்தப்படுகிறது. ammonium bicarbonate : அம்மோனியம் பைக்கார்பனேட் : இருமல் மருந்துகளில் கபத்தை வெளிக்கொணரும் மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது. அரிதாக வயிற்று மந்த நோயாளிகளுக்கு வயிற்று உப்புசம் அகற்றுகிற மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

ammonium chloride : அம்மோனியம் குளோரைடு : சிறுநீர்க் கோளாறுகளில் சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. அரிதாக