பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


42

கபம் வெளிக்கொணரும் மருந் தாகவும் பயன்படுகிறது.

amnesia : மறதி நோய் (நினை விழப்பு); மறதி : மனத் தளர்ச்சியினால் ஏற்படும் மனநோய் நிலை இசிவு நோயின்போது அதிர்ச்சிக்குப் பின்பு நினைவாற்றல் முழுவதுமாக இழந்து விடுதல். ஒரு விபத்திற்குப் பிறகு அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது முன்னோக்கிய மறதி' எனப்படும்; கடந்தகால நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது பின்னோக்கிய மறதி' எனப்படும் amniocentesis : கருச்சவ்வுத் துளைப்புச் சோதனை அடிவயிற்றுச் சவ்வின் வழியாகக் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக் குழியினைத் துளைத்தல். குழந்தை பிறப்பதற்கு முன்னர் இனக்கீற்றுக் கோளாறுகள், வளர்சிதை மாற்றப் பிழைபாடுகள், முதிர்கருக்குருதி நோய்கள் உள்ளனவா என்று கண்டுபிடிக்கும் சோதனைக்காகத் திரவ மாதிரியை எடுப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது amniography. கருச் சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம்; பனிக்குட வரைவி. கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பையினுள் ஒளி ஊடுருவாத ஊடு பொருளை ஊசி மூலம் செலுத்திய பின், அந்தச் சவ்வுப் பையினை ஊடுகதிர (எக்ஸ்-ரே ) ஒளிப்படம் எடுத்தல். இதில் கொப்பூழ்க் கொடியும், நச்சுக் கொடியும் பதிவாகும்

amnion : கருச்சவ்வுப்பை; பனிக்குட உறை : குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப்பை இதில் முதிர் கருவும், கருப்பைத் திரவமும் இருக்கும் இது கொப்பூழ்க்கொடியைப் போர்த்தியிருக்கும்; இது முதிர் கருவுடன் கொப்பூழ்க் குழியில் இணைக்கப்பட்டிருக்கும்.

amnionitis : கருச்சவ்வுப்பை வீக்கம், பனிக்குட அழற்சி

amnioscopy: கருநோக்குக் கருவி ; பனிக்குட நோக்கி : அடிவயிற்றுச் சுவரின் வழியாகச் செலுத்திக் கருவையும், சுருப்பைத் திரவத்தையும் பார்ப்பதற்கு உதவும் ஒரு கருவி. கருப்பைத் திரவம் தெளிவாகவும், நிறமின்றியும் இருந்தால் அது இயல்பான நிலையாகும். இத் திரவம் மஞ்சளாக அல்லது பச்சையாக இருந்தால், அதில் அபினிக் அமிலம் கலந்திருப்பதைக் குறிக்கும். இது கருவில் நோய் கண்டிருப்பதைக் காட்டுவதாகும்.

amniotic cavity : கருச்சவ்வுக் குழி ' குழந்தை பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்கும், தொடக்க நிலையிலுள்ள (முதிராத) கருமுளைக்குமிடையில் உள்ள திரவம் நிரம்பிய குழிவு.

amniotic fluid : கருப்பைத் திரவம்; பனிக்குட பாய்மம் : குழந்தை கருப்பையில் இருக்கும் காலம் முழுவதும், கருப்பைச் சவ்வும். முதிர்கரு உற்பத்தி செய்யும் ஒரு திரவம். இது முதிர்கருவுக்குப் போர்வை போல் இருந்து பாதுகாப்பளிக்கிறது இந்தத் திரவம். தீவிரமாக வேதியியல் பரிமாற்றங்கள் நடைபெறும் ஒரு ஊடு பொருளாகும் இதனைக் கருச்சவ்வுக்குழியைச் சுற்றியுள்ள உயிரணுக்கள் சுரந்து. மீண்டும் ஈர்த்துக் கொள்கின்றன.

amniotomy : கருப்பை பிளவுறுத்தல் முதிர்கருச் சவ்வுகளைச் செயற்கை முறையில் பிளவுறுத்துதல் பிள்ளைப் பேற்று வலியை விரைவு படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

amoeba : அமீபா (ஓரணுவுயிர்), நெகிழி : ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம் ; வயிற்றுடலி