பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இதில், ஒரே அணுவே, உணவு உட்கொள்ளுதல், கழிவுப் பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம்பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இது தன்னைத்தானே பிளவுபடுத்திக் கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது. இதில் ஒரு வகையான " என்டாமீபா என்ற நுண்ணுயிர் மனிதரிடம் வயிற்று அளைச்சல் (சீதபேதி) உண்டாக்குகிறது.

amoebiasis : அம்பா உறைவு: பெருங்குடல் சீழ்ப் புண் : பெருங் குடலில் ஓரணுவுயிர் என்டாமீபாக்கள் ஏராளமாக மொய்த்திருத்தல். இதனால் சளித்தாக்குதல் ஏற்பட்டுச் சீழ்ப்புண் (அல்சர்) உண்டாகிறது. இது இழைமச் சளிச்சவ்விலும், இரத்தத்திலும் சீழ் உண்டாகி வயிற்று அளைச்சல் (சீதபேதி) ஏற்படுகிறது. குருதிநாள இரத்தவோட்டத்தில் அமீபா நுழையுமானால் கல்லீரல் சீழ்க்கட்டு உண்டாகிறது. மலத்தில் உள்ள அமீபாவைக் கொண்டு இந்நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.

amioebiform: வயிற்றுடலி வடிவமுள்ள .

amoebicide : அமீபா கொல்லி : அமீபாவைக் கொல்லும் ஒரு மருந்து.

amoeboid : அமீபா போன்ற : ஓரணுவுயிராகிய அமீபாவை (வயிற்றுடலி) வடிவிலும் அசைவிலும் ஒத்திருக்கிற உயிர். எடுத்துக்காட்டு : இரத்த வெள்ளை அணுக்கள்.

amoeboma : அமீபோமா : அமீபா கட்டி நெகிழிக் கட்டி : பெருங்குடல் வாயில் அல்லது பெருங்குடல் குதவாயில் ஏற்படும் கட்டி. இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற் பட்டு கடலில் அடைப்பு ஏற்படு கிறது.

amoxil : அமோக்சில் : அமோக்சிலின்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

amoxycillin : அமோக்சிசிலின் : இது ஒரு நோய் எதிர்ப்புப் பொருள். இது காற்றுக் குழாய்ச் சுரப்புகளில் ஆம்பிசிலினைவிட எளிதாக ஊடுருவி மூச்சடைப்பு நோய்களைக் குணப்படுத்துகிறது.

ampiclox : ஆம்பிக்ளாக்ஸ் : ஆம்பிசிலின், கிளாக்சாசிலின் ஆகிய இரண்டும் கலந்த கலவையின் வாணிகப் பெயர்.

ampoule : மருந்துச் சிமிழ்: தோலினுள் செலுத்தப்படும் ஊசி மருந்தினையுடைய கண்ணாடிச் சிமிழ்.

ampulla : குழாய்க்குடுவை; குடுவை : உடலிலுள்ள குழாய் அல்லது பையின் விரிந்த கடைப் பகுதி

amputation : உறுப்பு நீக்கம் ; அங்க வெட்டு, துண்டித்தல் : உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்து விடுதல். மார்பகத் துண்டிப்பு.

amylase. அமிலேஸ் : மாச்சத்துப் பொருள்களை சர்க்கரையாக மாற்றக்கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).

amyinitrite : அமில்நைட்ரைட்டு விரைந்து ஆலியாகக் கூடியதாகவும். துரிதமாகச் செயற்படத்தக்கதாகவும் உள்ள குருதிநாள விரிவகற்சி மருந்து. இதயப் பாதிப்பினால் ஏற்படும் தொண்டையடைப்பைக் குணப்படுத்த பயன்படுகிறது

amylobarbitone : அமிலோபார் பிட்டோன் : நடுத்தரமான செறிவினை நீட்சி உடைய 'பார்பிட்டுரேட்' என்னும் தூக்க மருந்து.