பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


48

முடிந்ததும் அந்தக் குழாய் எடுக் கப்பட்டு அங்கே நேரான அழுத்தம் மூலம் 15-30 நிமிடம் வரை குருதிக் கசிவை நிறுத்துவதற்காக அழுத்தப்பட வேண்டும். இந்தப் பரிசோதனை முடிந்த அன்றே கூட வீட்டுக்குச் சென்றுவிடலாம். இந்தப் பரிசோதனை செய்து கொள்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய மூன்று இன்றியமையாத நிபந்தனைகள் : (1) பரிசோதனைக்கு முந்திய நாள் இரவுக்கு மேல் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. (2) காலையில் பல் தேய்க்கலாம்; வாய்கழுவலாம். ஆனால், தண்ணீர் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், (3) பரிசோதனை முடிந்து உடனே வாகனங்களை ஓட்டக்கூடாது அமெரிக்காவில் இந்தப் பரிசோதனையை "வடிகுழாய் இதய அழுத்த அளவீடு ( Cardiac Cathete -reization) என்கின்றனர்.

angiology: குருதி நாளவியல்; உடற்குழாயியல் ; குழலியல் : குருதி நாளங்கள், ஊனீர் நாளங்கள் பற்றி ஆராயும் அறிவியல்

angle of mandible . கீழ்த் தாடைக் கோணம்

angioma : குருதி நாளக் கட்டி இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கட்டு

angiooedema குருதி நாளழற்சி : இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளிலும் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சியினால் மரணம் நேரிடலாம் குரல் வளை அழற்சியினால் உடனடியாக நாளங்களில் ஊடுருவல் அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்களிலிருந்து ஊனீர் அண்டைத் திசுகளுக்குள் ஊடுருவிச் செல்கிறது. வீக்கமும் ஏற்படுகிறது.

angioplasty : குருதிநாள் ஒட்டறுவை மருத்துவம் ; குருதிக் குழாய்ச் சீரமைப்பு: குழல் அமைப்பு : இரத்த நாளங்களில் இழைம அறுவைச் சிகிச்சை செய்தல்.

angiosarcoma குருதிநாளப்புற்றுக் கட்டி ; குருதிக் குழாய்ப் புற்று; குழல் சதைப் புற்று : இரத்த நாளங்களில் உண்டாகும் உக்கிரத் தன்மை வாய்ந்த கட்டி.

angiospasm : குருதிநாள இசிப்புத் தசைச் சுருக்கம்; குழாய் இசிவு: குருதி நாளங்களில் ஏற்படும் கடுமையான தசைச் சுரிப்பு நோய்.

anhidrosis : வியர்வைக் குறை நோய்; வியர்வையின்மை : வியர்வை போதிய அளவில் சுரக்காததால் உண்டாகும் நோய்

anhidrotics : வியர்வைக் குறைப்பு மருந்து : வியர்வைத் தணிப்பிகள் : வியர்வை சுரப்பதைக் குறைக்கும் ஒருவகை மருந்து

anhydraemia : குருதித் திரவக் குறைநோய்; வரளி இரத்தம் ; குருதிக் குறை . இரத்தத்தில் திரவம் போதிய அளவு இல்லாதிருத்தல்.

anhydrous : நீரின்மை நோய்; வரண்ட நோய்; நீரற்ற; நீரில்லா உடலில் நீர் அடியோடு இல்லாது போதல்

anicteric : மஞ்சட் காமாலையின்மை, மஞ்சள் நிறமின்மை : மஞ்சட் காமாலைக் கோளாறு இல்லாதிருத்தல.

anileridine : அனிலரிடின் அபினி போன்ற பண்புகள் கொண்ட ஒரு செயற்கை மருந்து

ansiline அன்சிலின் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்ப் பசையுள்ள ஒரு கூட்டுப் பொருள்.