பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


anteflexion : உறுப்பு முன் வளைத்தல் . முன்மடக்கம். கருப்பையின் நிலையிலிருந்து பொதுவாக முன்னோக்கி வளைந்திருக்கும் ஓர் உறுப்பு .

antemortem: மரணத்திற்கு முந்திய; இறக்குமுன் ; மரிக்குமுன் ; மரணத்திற்கு முற்பட்ட நிலை.

antenatal : பேறு காலத்திற்கு முற்பட்ட ; முன்பேற்று ; கருக்காலம் : பேற்று முன்நிலை : பிள்ளைப் பேற்றுக்கு முந்திய நிலை.

antepar : ஆன்டிப்பார் : பைப்பரசீன் அடங்கிய நீர்மம் அல்லது மாத்திரை.

antepartum: பிறப்புக்கு முன் மகப்பேற்றுக்கு முன் ; பிறப்பு முன் நிலை : பொதுவாக, நிறைமாத மகப்பேற்றுக்கு முந்திய 4 மாதங்கள். அதாவது. 6ஆம் மாதம் முதல் 9ஆம் மாதம் வரை.

anteversion : முன்னோக்கிச் சாய்வு: முன்சாய்வு : உடலின் ஓர் உறுப்பு அல்லது பகுதி முன்னோக்கிச் சாய்ந்தோ இடம்பெயர்ந்தோ இருத்தல்.

anthelmintic : குடற்புழு நீக்க மருந்து : புழுப்பகை குடற்புழு மருந்து : குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற அல்லது ஒழிக்கிற ஒரு மருந்து.

anthiphan : ஆந்திஃபன் : மெப்பிராமின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

anthracosis : நுரையீரல் நோய் நுரையீரல் கரிப்படிவு; கரிம நோய் : நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய்.

51

anthrax : நச்சுப்பரு : கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச்சீக்கட்டு நோய் இது ஒரு தொற்று நோய். இது கால் நடைகளிடமிருந்து மனிதருக்கும் நச்சுப்பரு தொற்றக் கூடும்.

anthropoid: சுருங்கிய இடுப்பெலும்பு : இடுப்பு வளையம் பக்கத்துக்குப் பக்கம் குறுகிச் சுருங்கியுள்ள இடுப்புக்கூடு.

anthropology: மானுடவியல் மாந்தவியல் : மனிதகுலத்தைப் பற்றி ஆராயும் துறை. இதில் பல பிரிவுகள் உண்டு ,

anthropometry : மனித உடலளவை; உடல் அளவி; மானிட நிலை அளவி : மனிதரின் உடல். அதன் உறுப்புகள் ஆகியவற்றின் அளவை ஒப்பீடு செய்வதற்காகவும், பாலினம், வயது. எடை , இனம் போன்றவற்றுக்கான உருமாதிரிகளை வகுப்பதற்காகவும் இந்த அளவை பயன்படுகிறது.

antiadrenergic: நரம்புத் தூண்டல் சமனமாக்கல் : பரிவு நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகளினால் உண்டாகும் தூண்டு விளைவுகளைச் சமனப்படுத்துதல் அல்லது குறைத்தல்,

antiallergic : ஒவ்வாமைத் தடுப்பு; மாற்று வினைப்பகை ஒவ்வாமை யைத் தடுத்தல்: குறைத்தல்.

antianabolic : புரதச் சேர்மம் தடுப்பு: உடல் புரதத்தின் கூட்டிணைவைத்தடுத்தல.

antianaemic : குருதிப் போக்குத் தடுப்பு மருந்து: சோகை எதிர்பபி : குருதிக் குழாய்களிலிருந்து - இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்கப்பயன்படும் மருந்து. எடுத்துக்காட்டு: வைட்டமின் K.