பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antidiabotic: நீரிழிவு மருத்துவம்: சர்க்கரை நோய் எதிர்ப்பி, நீரிழிவடக்கி : நீரிழிவு நோய்க்கு எதிரான மருத்துவச் சிகிச்சை முறைகளை இது குறிக்கிறது. இயக்குநீர் கணையச் சுரப்பு நீர் (இன்சுலின்) வாய்வழி மருந்துகள் ஆகியவை இதில் அடங்கும்.

antidiphtheritic : தொண்டை அழற்சித் தடுப்புச் சிகிச்சை தொண்டை அழற்சி நோயைத் (டிப்தீரியா) தடுப்பதற்கான சிகிச்சை முறைகள் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

antidiuretic : சிறுநீர்க் கழிவுத் தடுப்பு மருத்துவம், சிறுநீர்க் குறைப்பி; நீர் பெருக்கடக்கி : சிறுநீர் அளவுக்கு மீறிக் கழிவதைத் தடுப்பதற்கான சிகிச்சை முறை. antidote : மாற்று மருந்து : நச்சு முறிப்பி : நச்சு முறி : நச்சுப் பொருளை முறிப்பதற்குக் கொடுக்கப்படும் மாற்று மருந்து. எடுத்துக்காட்டாக அமில நஞ்சினை முறிக்க சோடியம் பைக்கார் பனேட் போன்ற காரப் பொருட்களைக் கொடுத்தல்.

anti-dysenteric : அனைச்சல் தடுப்பு மருந்து : வயிற்றளைச்சலைத் தடுப்பதற்கான மருந்து.

antiembolic: குருதிக் குழாயடைப்புத் தடுப்பு மருந்து : பக்கவாதத்திற்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக்கட்டி வழியடைப்பதைத் தடுக்கும் மருந்து.

antiometic : வாந்தித் தடுப்பு மருந்து : வாந்தியடக்கி : குமட்டலையும். வாந்தியையும் தடுக்கும் மருந்து.

antienzyme . இயக்குநீர் தடை பொருள் ; இயக்கு நீர் எதிர்ப்பி : ஓர் இயக்குநீர் (என்சைம்) செயற்படுவதைத் தடுக்கும் பொருள். இது சீரண மண்டலத்தில் இருந்தால், நோய்த்தடுப்பை எதிர்க்கிறது.

antiepileptic : வலிப்பு நோய் தடுப்பு மருந்து வலிப்படக்கி மருந்து : காக்காய் வலிப்பு அடிக்கடி வருவதைக் குறைக்கும் மருந்து.

antifebrile : காய்ச்சல் தடுப்பு மருந்து: காய்க்கடைக்கி : காய்ச்சலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் மருந்து.

antifebrin: காய்ச்சல் எதிர்ப்பு மருந்து : காய்ச்சலைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் அசிட்டானிலைடு என்ற மருந்து. இது அசிட்டிக் அமிலம், அனிலின் இரண்டும் கலந்து பெறப்படுகிறது.

antifibrinolytic : ஊனீட் கோளாறு தடுப்பு மருந்து : கட்டியாக உறையக் கூடிய ஊனீர் கசிவுக் கோளாறுகளைத் தடுக்கக்கூடிய மருந்து.

antifungal : காளான் ஒழிப்பு மருந்து; காளான் நீக்கிகள், பூசணப்பகை : நோய்த்தன்மையுடைய காளான் (நாய்க்குடை) வகையை ஒழிக்கும் மருந்து.

antigen: காப்பு மூலம்; உடற்காப்பு ஊக்கி; விளைவியம் : அயல் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் தற்காப்புக்காக உண்டுபண்ணும் பொருள் மூலம்.

antihaemophilic globulin(AHG) குருதிப்பெருக்குத் தடுப்புப் புரதப் பொருள் : இரத்தக்கட்டியில் அடங்கியுள்ள காரணி VIII. இது நிண நீரில் உள்ளது; குருதி நிண நீரில் இல்லை . குருதிப் பெருக்கில் குறைவாக இருக்கிறது.

antihaemorrhagic : குருதிப் போக்குத் தடைப் பொருள் , குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்கும் பொருள். இதனை வைட்டமின்-K என்பர்.