பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

antihypertensive : உயர் இரத்த அழுத்தத் தடைப்பொருள் ; மிகையழுத்தக் குறைப்பி; போழுத்தத் தணிப்பி : உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு பொருள். 

antiinfective : தொற்றுத் தடைப் பொருள் : நோய் தொற்றுவதைத் தடுக்கும் மருந்து. இதனை வைட்ட மின் A' என்பர்.

antiinflammatory : வீக்கத் தடுப்புப் பொருள் நீக்கி; அழற்சித்தடை: வீக்கத்தைக் குறைக்கிற அல்லது வீக்கம் ஏற்படாமல் தடுக்கிற பொருள்.

antileprotic : தொழுநோய்த் தடுப்பு மருந்து : தொழுநோய் எதிர்ப்பி; தொழுநோய்ப் பகை. தொழுநோய் ஏற்படாமல் தடுக்கிற அல்லது தொழு நோயைக் குணப்படுத்துகிற ஒரு மருந்து.

antilymphocyte serum (ALS) : நிணநீர் அணு எதிர்ப்பு ஊனீர்படி நீர்ச் செல் எதிர்ச்சீரம் : நிணநீர்களின் செயல்களைத் தடுத்து அவற்றைக் கட்டியாக்குகிற நோய் எதிர்ப்புப் பொருள்களையுடைய ஊனீர்.

antimetabolite : வளர்சிதை மாற்றத் தடுப்புப் பொருள் : ஓர் உயிரணுவின் கருமையப் புரதங்களில் ஒருங்கிணைத்து அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குத் தேவையான வேதியியல் பொருள்களை ஒத்திருக்கும் ஒரு கூட்டுப் பொருள். இது புற்று நோய்ச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

antimicrobial: நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள நுண்ணுயிர்ப் பகை : நோய் நுணமத் தடை : உயிர் நுண்மங்களுக்கு எதிராகச் செயற்படும் பொருள்

antimigraine : ஒற்றைத் தலைவலித் தடுப்பு மருந்து : கடுமையான ஒற்றைத் தலைவலியைத் தடுக்கும் மருந்து.

antimitotic : உயிரணுவுப் பிளவியக்கத் தடுப்பு மருந்து திசுப்பிளப்புத் தடை : உயிரணு நுண்ணிழையாகப் பிரிந்து இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கும் மருந்து. புற்று நோயைக் குணப்படுத்துவதற்கான பல மருந்துகளை இது குறிக்கும்.

antimony and potassium tartrate : கருநிமிளை மற்றும் பொட்டா சியம் டார்ட்ரேட் : அஞ்சனக்கல் எனப்படும் கருநிமிளை (ஆன்டிமணி) பொட்டாசியம் புளியகக் காடியின் உப்புச்சத்து அடங்கிய ஒருவகைப் பழைய மருந்து. இது இப்போது, வெப்பமண்டல நோய்களைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

antimutagen வகை மாற்றத் தடுப்புப் பொருள் : உயிரின வகை மாற்ற வினையைப் பயனற்றதாக்கும் ஒரு பொருள்.

antimycotic : காளான் அழிப்புப் பொருள் ; காளான் எதிர்ப்பி : நோய் உண்டாக்கும் ஒட்டுயிர்க்காளான்களை அழிக்கும் ஒரு மருந்து.

antineoplastic: புது உயிர் ஊன்ம எதிர்ப்புப் பொருள் . புதிய உயிர் ஊன்மங்களுக்கு எதிராகச் செயற்படும் ஒரு பொருள்.

antineuritic : நரம்பு நோய்த்தடுப்பு மருந்து : நரம்பழற்சித் தடை: நரம்பு நோயைத் தடுக்கும் மருந்து. இது குறிப்பாக வைட்டமின் - B கலவையைக் குறிக்கும்

antioxidants : ஆக்சிகரண எதிர்ப்புப் பொருள் ; ஆக்சியேற்றி எதிர்ப்புப் பொருள் ; உயிர்வளியேற்ற எதிர்ப்பிகள் : ஆக்சிகரண முறையைத் தாமதப்படுத்தும் ஒரு பொருள்.

antiparkinson (ISM) drugs : பார்க்கின்சன் நோய்த்தடை மருந்து: ‘ஃபினோத்தியாசின்' போன்ற முக்கிய சமனப்படுத்தும் மருந்து