பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


56

லிஸ்டர் பிரபு 1880இல் அறுவைச் சிகிச்சையில் கார்பாலிக் அமிலத்தை முதன் முதலாக இதற்குப் பயன்படுத்தினார்.

antiseptics : நோய் நுண்மத் தடை மருந்துகள், சீழ் எதிர்ப்பி, நச்சு நீக்கி நச்சு நீக்குவி : நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற வேதியியல் பொருள்கள். இவை உயிருள்ள திசுக்களில் பயன்படுத்தப்படுகிறது.

antisorum: நோய் எதிர்ப்பு ஊனீர் எதிர்ச் சீரம் ஒருவிலங்கின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது தேவையான காப்பு மூலத்தின் மூலம் நோய்த் தடைக்காப்பு செய்யப்பட்டிருக்கும். இதில் பெருமளவில் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியிருக்கும்.

antisialagogus : உமிழ்நீர் தடுப்புப் பொருள் எச்சில் சுரப்பு ஒடுக்கி : வாயில் அளவுக்குமிஞ்சி எச்சில் ஊறுவதைத் தடுக்கும் பொருள்.

antisocial : மனநலக் கேடு : சமுதாயத்தை வெறுக்கிற மனநிலை. ஒரு சமுதாயத்தின் அதன் உறுப்பினர்கள் விதிக்கும் கடமைப் பொறுப்புகளையும், கட்டுப்பாடு களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனநிலை

antispasmodic : தசைச் சுரிப்புத் தடுப்பு முறை: இசிவகற்றி : தசையில் சுரிப்புக் கோளாறுகளினால் ஏற்படும் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை.


antisterility: மலடு நீக்க மருந்து; மலடு நீக்கி. இனப்பெருக்கத் தகுதியின்மையை நீக்குவதற்கான மருந்து வைட்டமின் 'E' இப்பணியைச் செய்கிறது.

antisyphilitic. மேகப்புண் தடுப்பு முறை; மேகப் புண் ஒழிப்பு : மேகப்புண் தடை : மேகப்புண் (கிரந்தி) என்ற மேக நோயைத் தடுப்பதற் கான சிகிச்சை முறை.

antithrombin : திராம்பின் தடை; குருதியுறைவுத் தடுப்புப் பொருள் : இரத்தத்தில் இயற்கையாக இருக்கும் குருதியுறைவுத் தடுப்புப் பொருள். எடுத்துக்காட்டு : ஹெப்பாரின்

antithrombotic : குருதிக் கட்டுத் தடுப்பு மருத்துவமுறை; படிம உறை வெதிர்ப்பு : குருதி நாளங்களில் குருதிக்கட்டு ஏற்படாமல் தடுப்பதற்கான அல்லது அதனைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை. antithymocyte globulin (ATG): கணையச் சுரப்பி நோய்த் தடுப்புத் தசைப்புரதம் : கழுத்துக் கணையச் சுரப்பி நீரை காப்பு மூலங்களுடன் பிணைக்கும் நோய்த் தடுப்புத் தசைப் புரதம்.

antithyroid : கேடயச் சுரப்பிக் குறைப்பு மருந்து, தைராய்டு எதிர்ப்பி: கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பியான கேடயச் சுரப்பியின் (தைராய்டு) நடவடிக்கையைக் குறைக்கப் பயன்படும் ஒரு மருந்து.

antitoxin : நஞ்சு எதிர்ப்புப் பொருள் ; எதிர் நச்சு நச்செதிர்ப்பி; நச்சு முறியம் : ஒரு நஞ்சினை முறிப்பதற்காகக் கொடுக்கப்படும் ஒரு நோய் எதிர்ப்புப் பொருள்.

antitragus : செவிக்காடு : புறச் செவியின் நுழைவாய் எதிர்ப் புடைப்பு.

antituberculosis : காசநோய் மருத்துவ முறை : காசநோய் எனப்படும் எலும்புருக்கி நோயைத் தடுப்பதற்கான அல்லது குணப்படுத்துவதற்கான சிகிச்சைமுறை.

antitumour : கழலை எதிர்ப்பு மருந்து : கழலை அல்லது கட்டி