பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


58

இருத்தல்; செயலற்ற தன்மை; பாராமுகமாக இருத்தல்.

apepsia : வயிற்று மந்தம்: செறிமானமின்மை: செமிப்புக்குறை : செமிக்கும் ஆற்றல் குறைவாக இருத்தல்.

aperient (peritive) பேதி மருந்து; மலமிளக்கி, மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து. aperitif : பசியெழுப்பும் நீர்மம்: பசியூட்டும் மதுபானம்

aperistalsis: குடல் முடக்கு வாதம் ; அலைவின்மை : குடலில் உணவு சாரம் எளிதில் செல்லுவ தற்கிசைவான உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள் இல்லாதிருத்தல்.

apgar score : அப்கார் கணிப்பு: பிறந்த குழந்தையின் பொதுவான நிலைமையைக் கணித்தறிவதற்கு அமெரிக்க மருத்துவ அறிஞர் டாக்டர் விர்ஜினியா அப்கார் வகுத்த ஒருமுறை. இதன்படி, மூக்கு வழியாக ஒரு சிறு குழலைச் செலுத்தி இதயத் துடிப்பு விகிதம், சுவாச முயற்சி, தோல் நிறம், தசையின் இயல்பு. அனிச்சை செயல் ஆகியவற்றின் அடிப்படை யில் 0.1,2 என்ற கணிப்பு எண்கள் கொடுக்கப்படுகின்றன. 8-10வரை கணிப்பு எண் இருக்குமாயின் குழந்தை மிகச்சிறந்த நிலையில் இருக்கிறது என்று கருதப்படுகிறது. கணிப்பு எண் 7 - க்குக் குறைவாக இருக்குமாயின் குழந்தையின் நிலை கவலைக்குரியது என்று கருதப்படுகிறது

aphagia : தொண்டையடைப்பு; விழுங்கின்மை : விழுங்குவதற்கு இயலாதிருத்தல்.

aphakia புரையிலாக் கண. விழி வில்லையின்மை ; ஒளியமின்மை : கண்ணில் ஒளி எளிதில் ஊடுருவும் முகப்புக் குமிழ் இல்லாதிருத்தல. கண்புரையை அகற்றிய பின்பு உள்ள கண்ணின் நிலை.

aphasia : பேச்சின்மை : மூளைக் கோளாறினால் உண்டாகும் பேச்சிழப்பு. இதில் முக்கியமாக உந்து பேச்சின்மை, உணர்வுப் பேச்சின் மை என்று இருவகை உண்டு. பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த இருவகைக் கோளாறுகளும் அமைந்திருக்கும். aphasic பேச்சின்மை நோய்மருந்து; பேச்சற்றவர்: பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து.

aphonia : குரலின்மை ; பேச்சொலியின்மை : நரம்புக் கோளாறினால் பேச்சாற்றலை இழத்தல். aphonic aphonous: வாய்பேசாத.

aphrodisiac. இணை விழைச்சுத் தூண்டு மருந்து, பாலுணர்வு ஊக்கி; பாலுணர்வூட்டி : சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டுகிற பொருள் அல்லது மருந்து.

aphtha . கொப்புளம் வாயின் உட்பகுதியை மூடியிருக்கும் சளிச்சவ்வு வழியாக, சில நஞ்சுடைய அல்லது எரிச்சலூட்டும் பொருளிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருளினால் வாயில் உண்டாகும் கொப்புளம்.

aphthbee கொப்புளங்கள் ; வாய்க் கொப்புளம் : தோலில் பட்டைபட்டையாகத் தடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள்.

apicectomy. பல்நுனித் துண்டிப்பு பல் வேரின் மேல் நுனியைத் துண்டித்து எடுத்தல்,

aplacental : கொப்பூழ்க் கொடி யற்ற.

aplasia திசுவளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சிக் குறை; வளர்வின்மை : திசுக்கள் முழுமையாக வளரா திருத்தல் அல்லது அறவே வளராதிருத்தல்.

aplastic புதுத்தசை வளர்ச்சியின்மை, வளர்விலாத புதிதாகத் திசு வளர்ச்சி ஏற்பட இயலாதிருத்தல்;