பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 articulation : மூட்டிணைப்பு: மூட்டு அமைப்பு: மூட்டுப்பொருத்தம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எலும்புகளின் மூட்டு இணைப்பு. artificial blood : செயற்கை இரத்தம் : ஆக்சிஜன் வாயுவைக் கொண்டு செல்லக்கூடிய ஒரு திரவம். இது அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. artificial insemination - செயற்கைக் கருவூட்டல் ; செயற்கை முறை விந்தேற்றல், விந்தூட்டல் : செயற்கை முறையில் கருவுறச் செய்தல்.

artificial kidney: செயற்கைச் சிறு நீரகம் : நோயினால் சிறு நீரகம் செயலிழக்கும் போது, சிறு நீரகத்தின் வேலையைச் செய்வதற்கு உதவும் ஒரு சாதனம்.

artificial limb - செயற்கை உறுப்பு உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைத்தல்

artificial lung : செயற்கை நுரையீரல் : செயற்கைச் சுவாசக் கருவி .

artificial pacemaker . இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவி : உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவது இதயம். இதயத்தில் மேலறைகள் இரண்டும். கீழறைகள் இரண்டும் உள்ளன. அசுத்த இரத்தம் முதலில் இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து இடது கீழறைக்குச் சென்று, அங்கிருந்து அழுத்தப்பட்டு நுரையீரலுக்குச் சென்று அங்கு ஆக்சிஜனைப் பெற்றுச் சுத்தமடைகிறது. சுத்தமடைந்த இரத்தம் வலது மேலறைக்கு வந்து, அங்கிருந்து வலது கீழறைக்குச் சென்று அங்கிருந்து அழுத்தப்பட்டு மகாதமனி வழியாக உடலின் மற்றப் பகுதிகளுக்கும் செல்கிறது மேலறைகளும். கீழறைகளும் சீரான ஒரே வேகத்தில் இயங்கும் போது இரத்த ஓட்டம் சீராக இருக்கும் மேலறைகளும் கீழறைகளும் இயங்கும் வேகமே இதயத்துடிப்பு. இந்த வேகத்தைச் சீர்படுத்த நம் இதயத்தில் இயற்கையாகவே சினோட்ரியல் நோய்' என்ற அமைப்பு உள்ளது. நரம்பு உயிரணுக்களாலான இந்தச் சிறிய தரைப்பகுதி. இடது மேலறைச் சுவரில் உள்ளது. இதிலிருந்து எழும் துடிப்பு . மேலறைகளும் கீழறைகளும் ஒரே சீராக இயங்க உதவுகிறது. இது சரியாக வேலை செய்யாதபோது, இதயத்தின் இரத்த ஓட்டம் பாதித்து. இதயக் கோளாறு ஏற்படுகிறது. இந்த கோளாறைச் சரிசெய்ய இதயத் துடிப்பைச் சீராக்கும் இந்தச் செயற்கைக் கருவி பொருத்தப்படுகிறது. இதில், லிதியம் அயோடினாலான மின்கலம் உள்ளது. இதன் எடை 40கிராம் இருக்கும். மார்பில் இதயம் இருக்கும் பகுதியின் மீது சிறிய அறுவை செய்து இக்கருவியைத் தசைப் பகுதிக்குள் வைக்கப்படுகிறது. இதிலுள்ள மிக நுண்ணிய கம்பி (வயர்) இதயத் தசைப்பகுதியுடன் இணைக்கப்படுகிறது. இதிலுள்ள மின்கலம் மூலம், கம்பி தூண்டுதல் பெற்று இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. இக்கருவி பொருத்தப்பட்ட சில நாட்களில் நோயாளியின் இதயம் மீண்டும் சீராக இயங்கத் தொடங்கும். அவ்வாறு சீராக இயங்கத் தொடங்கியதும் இக்கருவி தன் பணியை நிறுத்திக் கொள்ளும். மீண்டும் கோளாறு ஏற்பட்டால், இக்கருவி மீண்டும் தானாகவே பணியைத் தொடங்கிவிடும். இக்கருவி 10 ஆண்டுகள் வரைச் செயற்படும்.

asbestos : கல்நார் : தீக்கிரையாகாது. ஆடையாக நெய்வதற்குப் பயன்படுகிற நார் அமைவுடைய கனிப் பொருள் வகை.