பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 asbestos : கல்நார் : தீக்கிரையாகாது. ஆடையாக நெய்வதற்குப் பயன்படுகிற நார் அமைவுடைய கனிப் பொருள் வகை.

asbestosis: கல்நார் நோய்; கல்நார் படிவ நோய் : கல்நார் தூசியையும் இழைமத்தையும் சுவாசிப்பதால் ஏற்படும் ஒருவகைச் சுவாசக் கோளாறு.

ascariasis : குடற்புழு நோய்; உருளைப்புழு நோய் : சிறுகுடலில் குடற்புழுக்கள் பெருகுவதால் உண்டாகும் நோய். உருண்டைப் புழுக்கள் பெருகினால், இந்நோய் இரைப்பை, ஈரல்குலை நுரையீரல் ஆகியவற்றுக்கும் பரவுகிறது.

ascaricide : குடற்புழு ஒழிப்பான் : சிறுகுடற்புழுக்களை ஒழிக்கும் ஒருவகை மருந்து

ascarides : நீளுருள் புழு - சிறு குடற்புழு வகையைச் சேர்ந்த நீண்டு உருண்ட புழுக்கள். உருண்டைப் புழுக்கள், நாடாப் புழுக்கள் ஆகியனவும் இவ்வகையைச் சேர்ந்தவை.

ascaris : சிறுகுடற் புழு . குடலிலுள்ள வளையப் புழுக்கள் போன்ற புழுக்கள்.

aschoff's nodules : அஷாஃப் கரணை; அஷாஃப் நுண்கணு : கீல் வாத நோயின் போது நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் ஏற்படும் கரணைகள்.

ascites : மகோதரம் : அகட்டு நீர்க் கோவை.

ascorbic acid . ஆஸ்கார்பிக் அமிலம். இது வைட்டமின்-C' ஆகும். இது நீரில் கரையக் கூடியது ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும் போது இது அழிந்து விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் இது அழிந்து படுகிறது. இந்த ஊட்டச் சத்துக் குறைவினால் எதிர்வீக்க நோய் (ஸ்கர்வி) உண்டாகிறது. இரத்த சோகையை நீக்குவதற்கும். காயங்களை ஆற்றுவதற்கும் இந்த ஊட்டசத்து கொடுக்கப்படுகிறது.

asepsis : நச்சு நுண்மமின்மை ; சீழற்ற; சீழ்தவிர்ப்பு; சீழின்மை : கெடுபுண் உண்டாக்குகிற அல்லது தசையழுகலை உண்டாக்குகிற நோய்க் கிருமி இல்லாதிருத்தல்.

aseptic technique : தசையழுகல் தடைப் பொருள் ; சீழற்ற : தசையழுகல் நோயைத் தடுப்பதற்காக உடலுக்குள் செலுத்தப்படும் தசையழுகல் தடைப் பொருள் செலுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

asepticism: தசையழுகல் தடை முறை : தசையழுகல் நோயைத் தடுப்பதற்கான சிகிச்சை முறை.

aserbine : அசர்பைன் : தீப்புண், நாள அழற்சி, நோவுதராத சீழ்ப் புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான களிம்பு மருந்து. கட்டிகளை இளக்கும் தன்மையுடைய இந்த மருந்தில். சாலிசிலிக் அமிலம், பென்சாயிக் அமிலம் அடங்கியுள்ளன.

asilone : அசிலோன் : வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஆகிய நோய்களைக் குணப்படுத்துவதற்கான பாலிமெத்தில் சிலோக்சான். அலுமினியம் ஹைட்ராக்சைடு அடங்கிய ஒரு மாத்திரை.

aspergillus : பூசினை ; பூசனம் : பூஞ்சைக் காளான் : பூஞ்சைக் காளான் இனம் இதில் சில வகைகள், நோய் உண்டாக்கக் கூடியவை

aspermia : விந்துக் குறைபாடு; விந்தணுவின்மை: விந்துயிரின்மை; விந்திலா : விந்து சுரத்தல் அலலது வெளிப்படுதல் இல்லாதிருத்தல்.

asphyxia நச்சுத் திணறல்; நச்சுத் தடை; நச்சடைப்பு நாடி நிறுத்தம், மூச்சுத் தடைபடுதல்.