பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நுரையீரல்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன் டையாக்சைடு அளவு கூடும்போது இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

aspiration : உறிஞ்சியிழுத்தல், உறிஞ்சல் : உடலில் தங்கியுள்ள திரவங்களை உறிஞ்சி இழுத்தல். aspirator : உடல் நீர் உறிஞ்சி; உறிஞ்சி : உடலில் தங்கியுள்ள நீர் மங்களை உறிஞ்சி இழுக்கும் ஆற்றலுடைய மருந்து

aspirin: ஆஸ்பிரின் (வெப்பாற்றி). அசிட்டில் சாலிசிலிக் அமிலம், காய்ச்சலையும், நோய்களையும் அகற்றும் மருந்து.

assimilation: ஒன்றிப் போதல் செறிமானம் ; திசு உணவு மாற்றம்; தன்மயமாதல் : ஏற்கெனவே செரிமானமடைந்த உணவுப் பொருள்களைத் திசுக்கள் தன்னியற்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளுதல்

assisted ventilation : செயற்கைச் சுவாசம் : சுவாசிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு எந்திரத்தின் மூலம் சுவாசிப்பதற்கு உதவுதல் association : எண்ண இயைபு: பிணைப்பு. இணைவு, கூட்டு - உளவியலில் பயன்படுத்தப்படும் சொல், எண்ண இயைபு" என்ற தத்துவத்தின்படி, எண்ணங்களும், உணர்ச்சிகளும், அசைவுகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

astereognosis. வடிவக் குருடு : பொருள்களின் வடிவங்களையும், மாறா இயல்பினையும் உணர்ந்து கொள்ளும் திறன் இல்லாதிருத்தல்.

asthenia : தளர்ச்சி ; சோகை ; வலுவின்மை ; வலுவிழப்பு, பலவீனம்; வலுக்குறை : வலிமையின்மை; பலவீனம். தளர்ச்சியுடைமை asthenopia : பார்வைக் குறை

65

பாடு; பார்வை நலிவு : பார்வைத் திறன் குறைவாக இருத்தல்.

asthma : ஈளை நோய் (காசம்) : மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் நோய், மூச்சுக் குழாய்களில் கடுந்தசைச் சுரிப்பு காரணமாக இளைப்பும் மூச்சுவிடச் சிரமமும் ஏற்படுதல். இந்நோயைத் தடுப்பதற்கான பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

astigmatism : உருட்சிப் பிழை; சிதறல் பார்வை; புள்ளி தோன்றாமை, உருட்டுப் பிறழ்வு : காட்சி முனைப்பமைதிக் கேடு விளைவிக்கும் கண்ணோய், கண்விழிப்பின் புறத்திரையின் மீது ஒரு புள்ளியில் ஒளிக்கதிர்கள் ஒருங்கு குவியாமல் இருத்தல்.

astringency : தசைச் சுரிப்பு : திசுக்களை சுருங்கச் செய்து, குருதி சுரப்பதைக் குறைக்கும் நோய்.

astrocytoma : மூளைக் கழலை : மூளையின் மற்றும் முதுகந்தண் டின் கீழ்த்தசையில் மெதுவாக வளர்ந்துவரும் ஒரு கழலை.

AST test : ஏ.எஸ்.டி. சோதனை : "ஆஸ்பார்ட்டேட் டிரான்ஸ்ஃபெராஸ்" (AST) என்பது பொதுவாக ஈரல்குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகுகளுக்குமேல் இது இருந்தால், அது இயல்புக்கு மீறிய அளவாகும். இது ஈரல்குலை நோய் இருப்பதைக் குறிக்கிறது.

astrup test: ஆஸ்டிரப் சோதனை : இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பனடையாக்சைடு ஆகிய வாயுக்களின் அழுத்த அளவு களை அளவீடு செய்து. இரத்தத்