பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1001

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sick

1000

sideroblastic..


(மின்) ஆற்றல் மிகுந்த கட்டிடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உணர்குறிகளின் தொகுதி. தலைவலிகளும், சோம்பலும், உலர் தோலும், ஒவ்வாமை நுண்வளியறை அழற்சியும் அடிக்கடி உண்டாதல்.

sick : நோயுற்ற : 1. நலமில்லா, வியாதி, வியாதியால் துன்பப் படுகிற, 2. வாந்தி உணர்ச்சி உள்ள.

sick cell syndrome :நோயணு நோயியம் : உயிரணுக்களில் சோடியம் அளவு மிகுந்து, பொட்டாசியம் அளவு குறையும் தன்மை கொண்ட, நாட்பட்ட சோர்வுறச் செய்யும் வியாதிகளில் சோடியம் எக்கி இயங்காநிலை.

sicklaernia : அரிவாளணுச்சோகை : அரிவாளனுச்சோகை, மற்றும் அரிவாளனுவில் காணப்படும், புறநாள இரத்தத்தில் அரிவாளுரு சிவப்பணுக்கள் காணப்படுதல்.

sickness : நோய்நிலை : உடல் நலம் கெட்டநிலை.

sick sinus syndrome : நோய்ப்புழை நோயியம் : படபடப்பு, தலைசுற்றலகள், உணர்விழப்பு ஆகியவை உண்டாக்கும் பல வகை இதயத் துடிப்புலயக் கோளாறுகள் ஏற்படுத்தும் புழை இதய மேலறை வியாதி.

side effect : பக்க விளைவு : மருந்து கொடுப்பதால் விரும்பிய மாறுதலுக்கு மாறாக வேறு உடலியல் மாறுதல் ஏற்படுதல் எடுத்துக்காட்டாகத் தசைச் கரிப்புக் கோளாறுக்கு எதிரான புரோப்பெந்தலின் என்ற மருந்தினால், சில நோயாளிகளுக்கு வாய் உலர்தல் என்ற பக்க விளைவு உண்டாகிறது. மருந்துகளினால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளையும் இது குறிக்கும். சில மருந்துகளின் பக்க விளைவுகள் ஊகித்தறியக்கூடியவை. எடு: மெப்பாக்ரின் என்ற மருந்தினால், தோலும் கண்களும் மஞ்சளாகும், சைக்ளோபாஸ் ஃபாமைடினால் தலைமுடி கொட்டும்.

sideroblast : சிடெரின் முன்னணு : திகப்பாய்மத்தில் ஹீமோசி டெரின் குருணைகள்கொண்ட செவ்வணு முன்னணு.

sideroblastic anaemia : சிடெரின் அரும்பணுச் சோகை : இரும்புச் சத்துப் பயன்பாட்டுக் குறைவால் ஏற்படும் வளைய