பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1004

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

silver nitrate

1003

Sinoatrial


ரஜன் டையாக்ஸைடுக்கு ஆட்படும்போது ஏற்படும் நுரையீரல் பாதிப்பு. சிலோ (பசுந்தீவன பதனக்குழி).

silver nitrate : வெள்ளி நைட்ரேட் (சில்வர் நைட்ரேட்) : பாலுண்ணிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சிறிய குச்ச வடிவ மருந்து. சில சமயம், கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயங் களில் பாக்டீரியா புண்கள் ஏற்படாமல் தடுக்க 0.5% கரைசலாகவும் பயன்படுகிறது.

sims position : சிம் இருக்கை நிலை : நோயாளி இடதுபக்கமாகப் படுத்து வலது முழங்காலும் தொடையும் மேலிழுத்து, இடது கை முதுகுப் பக்கமாக வைத்து மார்பு முன் நோக்கியுள்ள பாதி குப்புறப்படுத்துள்ள நிலை, பேதி மருந்து (எனிமா) கொடுப்பதற்காகவும், நேர்க்குடல் பரிசோ தனைக்காகவும், கருப்பை உள் வரியைச் சுரண்டி நீக்கவும் பயன்படுத்தும் இருக்கை நிலை. அமெரிக்க மகளிர் நோயிய லாளர் ஜேம்ஸ் மேரியான் சிம்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Simmond's disease : சிம்மாண்ட் வியாதி : செனிப்புறுப்புகள் அண்ணீரகம் மற்றும் தைராயிடு சுரப்பி செயல் இழப்பால், உடல்நலம் சீர்கெட்டு, முதிரா முதுமை பாதித்த, பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சிக் கோளாறு நிலை.

simulation : போலிருத்தல்; போல் செய்தல் : ஒரு வியாதி அல்லது ஒரு அறிகுறி, மற்றொன்றைப் போலிருக்கும் நிலை.

simulator : போலக்காட்டி : எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை அல்லது நிலையைப் போன்று உருவாகும் ஒரு சூழ்நிலை அல்லது அமைப்பு.

sinew : தசைநாண்; தசைக்கட்டு : தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம்.

singer's nodes : சிங்கர் கணுக்கள் : குரலை அதிகம் பயன் படுத்துவதால் ஏற்படும் குரல் நாண்களில் நாரியக்கட்டி அல்லது காழ்ப்புக் கட்டியில் உள்ள சில நுண்கணுக்கள்.

sinisterocerebral : இடது பெரு மூளைய : இடது பெருமூளை அரைக்கோளத்தில் அமைந்து உள்ள அல்லது அது தொடர்பான.

sinography : புழைவரைவு : நிறப்பொருளை உட்செலுத்தி பைக்குழியை எக்ஸ்ரே பட மெடுத்துப் பார்த்தல்.

sinoatrial : புழைஇதய மேலறைய : சிரைப்புழை மற்றும் இதய வலது மேலறை தொடர்பான.