பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1007

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sleeplessness

1006

small intestine


துயிலும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ 60-90 நிமிடம் நீடிக்கும். ஒருவன் முழு ஒய்வு பெற்று நலன் பெறுவதற்கு இந்த இருவகை உறக்க நிலைகளும் முழுமை பெற வேண்டும்.

sleeplessness (insomnia) : உறக்கமின்மை.

sleepiness : உறக்கக் கலக்கம்.

sleeping draught : உறக்க மருந்து : தூக்கத்தைத் தூண்டும் குடி நீர்மம்.

sleeping sickness : உறக்க நோய் : ஆஃப்ரிக்காவில் பரவலாக நிலவும் ஒரு கொடிய நோய். ஒரு வகைக் ஈ கடியினால் ஏற்படும் நச்சு மூளை யைப் பாதிப்பதால் இந்நோய் உண்டாகிறது.

sleep walking : உறக்கத்தில் நடத்தல்; துயில்நடை : உறக்கத்தில் நடக்கும் கோளாறு.

slim disease : தேய்வு நோய் : எய்ட்ஸ் நோயில் மிகத் தீவிரமான எடையிழப்பு.

slipped disc : வட்டச் சில்லு சரிவு : இடைத் தண்டெலும்பு வட்டச் சில்லு சரிந்திருத்தல்.

slough : தோல் பொருக்கு; அசுறு; அழுகல் படலம்; அழுகு தோல் : சட்டைபோன்று கழன்று உதிர்ந்து விழும் மேலுரிப் போக்கு.

slow release drugs : தாமத மருந்துகள் : இரைப்பையில் கரையாமல், சிறுகுடலில் சிறிதுசிறிதாக விடுவிக்கப்பட்டு ஈர்த்துக் கொள்ளப்படும் மருந் துவகை சில மருந்துகள் இப்போது அடித்தோல் வழியில் இணைக்கப் படுகின்றன. அங்கு அவை மெல்ல மெல்ல விடு விக்கப்படும்.

slow.virus : தாமத வைரஸ் கிருமி : நீண்ட நாட்களுக்குப் பிறகு நோய்க் குறிகளைத் தோற்று விக்கும் நோய்க் கிருமி. இவை வெளிப்படையாக நோய்க் குறிகளைக் காட்டாவிட்டாலும், உள்ளுக்குள் நோய்த் தொற்றுக்கு வேலைசெய்து கொண்டிருக்கும்.

sludge : குழைப்பொருள் : ஒரு நீர்மத்தில் திட அல்லது பாதித் திடப் பொருள்கள் தொங்கியிருத்தல்.

small intestine : சிறுகுடல் : இரைப்பையின் வாயிற் குறுக்குத் தசையில் துவங்கி, வயிற்றுக் குழிவறையின் நடு மற்றும் கீழ்ப் பகுதியில் கருண்டு சென்று பெருங்குடலில் முடியும் உணவுப் பாதையிலுள்ள ஒரு நீண்ட குழல்பகுதி. இது முன் சிறுகுடல், இடைச்சிறுகுடல்,