பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1009

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

snow blindness

1008

sodium bicarbonate


உறுப்பெல்லைக்குள் உறையச் செய்வதற்குப் பயன்படுத்தப் படும் திடநிலை கார்பன்டை யாக்சைடு.

snow blindness : பனிக்குருடு : கடுமையான இமை நடுக்கமும் மீஊதா உளியால் பளிங்குப் படல அழற்சி.

snuffles : மூக்குறிஞ்சல்; மூக் கொழுக்கு : மூக்குச் சளிச் சவ்வு அடைப்பினால் ஏற்படும் மூக்குறிஞ்சும் உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமானால் அது பிறவிக் கிரந்தி நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

socialisation : சமுதாயச் சார்பாதல் : ஒருவர் மற்றவர்களோடு அனுசரித்துப் பழகுவதற்கு ஏற்றபடி மாறுதல்.

social medicine : சமூக மருத்துவம் : நோயுண்டாக்கும் சமூக நிறுவனங்களின் தன்மைகளை கண்டறிந்து மாற்றியமைப்பது தொடர்பான மருத்துவ இயல்.

sociology : சமூகவியல் : மனித சமுதாயத்தின் வளர்ச்சி, இயல்பு, சட்டங்கள் ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல்.

sociomedical : சமூக மருத்துவவியல்; சமுதாய மருத்துவம் : மருத்துவத்தினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் பற்றிய சிக்கல்களை ஆராய்தல்.

sociometry : சமூக நடத்தையளவு : மனிதர்களின் சமுதாய நடத்தையை அளப்பது பற்றிக் கூறும் சமூக அறிவியல் பிரிவு.

sociopathy : சமூக விரோதக் கோளாறு : சமூக விரோத ஆள்மைக் கோளாறு.

sociotherapy : சமூக மருத்துவம் : மனிதர்களுக்கிடையேயான உறவுநிலை மேம்படுத்தவும், சூழ்நிலை மாற்றியமைக்கவும் ஆலோசனை கூறும் மருத்துவ முறை.

socket : பொருத்துகுழி : 1. ஒரு பள்ளம் அல்லது குழிப்பகுதியில் அதற்கு தொடர்பான பகுதி ஒன்று பொருந்துவது. 2. மேல், கீழ் தாடைகளிலுள்ள குழிகளில் பற்கள் பொருந்தியிருத்தல்.

sodium acid phosphate : சோடியம் அமில பாஸ்ஃபேட் : உப்புப்பேதி மருந்து சிறுநீர்க் கழிவினைத் தூண்டக்கூடியது.

sodium benzoate : சோடியம் பென்சோயேட் : அமிலமாக்கக் கூடிய சிறுநீர்க்கழிவினை ஊக்குவிக்கக்கூடிய மருந்து.

sodium bicarbonate : சோடியம் பைக்கார்பனேட் வயிற்றுப்புளிப்பு அகற்ற வீட்டில் சாதார