பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1013

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

somnambulist

1012

sore throat


somnambulist : உறக்க நடை; துயில் இயக்கம்; தூக்க நடையர் : உறக்கத்தில் நடக்கும் இயல்பு; உறக்கத்தில் இயங்கத் தூண்டும் மூளைநிலை.

somniloquence (somnilo qu ism) : உறக்கப்பேச்சு : உறக்கத்தில் பேசும் பழக்கம்.

somnipathist : துயில் வசியமானவர் : துயில் வசியத்திற்கு உள்ளானவர்.

somnolence (somnolency) : உறக்க மயக்கம் : தூக்க மயக்க நிலை, உறக்கச் சடைவு.

somnolent : அரிதுயில் நிலையான : விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள.

somnolescend : அரைத்துயில் நிலையான.

somnolism : வசியத்துயில்நிலை.

soneryl : சோனரில் : பூட்டே பார்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

sonication : ஒலிச்சிதறல் : திடப் பொருள் கேளா ஒலிய்லைகளால் பாய்மத்தில் சிதறுநிலை.

Sonne dysentery : சோன்(னெ) சீதபேதி : டேனிஷ் நாட்டு துண் ணுயிரியலாளர் சி.சோன்(னெ) பெயராலழைக்கப்படும் விகெல்லா சோன்ன கிருமிகளால் ஏற்படும் மிதவகை சீதபேதி.

sonitus : காதொலி : காதுகளில் கேட்கும் சப்தம் அல்லது கணகண ஒலி.

sonograph : ஒலியலை வரைபடம்; ஒலி வரைபடம் : ஒலி யலைகளை வரைபடமாகப்பதிவு செய்தல்.

sonometer : ஒலிமானி : செவிப்புல உணர்வுமானி.

soporific : ஆழ் உறக்க மருந்து : ஆழ்நிலைத் தூக்க ஊக்கி, உறக்க மூட்டி : ஆழ்ந்த உறக்கத்தைத் தூண்டுகிற ஒரு மருந்து.

sorbide nitrate : சோர்பைடு நைட்ரேட் : தொண்டை வீக்கத்தில் தாங்கும் திறனை அதிகரிக்கும் மருந்து.

sorbitol : சோர்பிட்டோல் : குழந்தைகளுக்கு ஊட்ட இயற்கையில் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரைப் பொருள்.

sordes : வாய்ப் பொருக்கு : நோயின்போது வாயில், முக்கியமாக உதடுகளில் ஏற்படும் உலர்ந்த பழுப்பு நிறப் பெருக்கு.

sore throat : தொண்டையழற்சி : அடினோ வைரஸ் அல்லது குருதியழிவு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் கிருமிகளால் உண்டாகும்.