பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1016

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spectinomycin

1015

sperm


காக பெறப்பட்ட பொருள் அல்லது ஏதாவதொன்றின் சிறு பகுதி அல்லது மாதிரி.

spectinomycin : ஸ்பெடிக்னோமைசின் : எதிர்ப்பாற்றல் வாய்ந்த நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் உயிரி எதிர்ப்பொருள். மேகவெட்டை நோயைக் குணப்படுத்தப் பயன் படுகிறது.

spectrometry : வண்ணப்பட்டையளத்தல் : ஒரு வண்ணப்பட்டை மானி கொண்டு ஒளிக்கதிர்களின் அலை நீளத்தைக் கண்டறியும் செய்முறை.

spectrophotometer : வண்ணப்பட்டை ஒளிஅளவி : ஒரு பொருள் அல்லது கரைசலால் கடத்தப்படும் குறிப்பிட்ட அலை நீளம் கொண்ட ஒளித் திறனை அளக்கும் கருவி.

spectroscope : வண்ணப்பட்டைக்கருவி; ஒளி முறிவு நோக்கி : ஒளி நிழற்பட்டை ஒளியை ஆராய்வதற்கான ஒரு ஆய்வு கருவி.

spectrum : வண்ணக் கற்றை; வண்ணப்பட்டை; நிறமாலை : 1. வெண்மை ஒளி பல வண்ணப் பட்டைகளாகச் சிதறல், 2. மருந்துப் பொருள்களின் திறனளவு.

speculation : ஊகம்.

speculum : உடற்குழி நோக்கி; அகற்சிக் கருவி; உட்காட்டி : உடல் குழிவுகளை விரிவுபடுத்திக் காட்டும் கருவி, கண்ணகற்சிக் கருவி.

speech : பேச்சு; பேச்சாற்றல் : வாய்வழி உரையாடல்.

speech mechanism : பேச்சுச் செயல்முறை : மூச்சு விடுதல். குரலொலி எழுப்புதல், ஒலித் தெளிவு, ஒலியலை எதிர்வு, சொல்லுருவாக்கம் ஆகிய செய்முறைகள் அடங்கிய பேச்சுச் செயல்முறை.

speech-reading : செவிடர் பேச்சறி முறை : பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவிடர்கள் பேச்சைப் புரிந்து கொள்ளும் முறை.

speech therapy : பேச்சு மருத்துவம்; பேச்சுத் திருத்த முறை; பேச்சுப் பயிற்சி மருத்துவம் : உளவியல் அல்லது உடலியல் குறைபாடுகள் அல்லது நோய் காரணமாகப் பேச்சுத்திறன் இழந்தவர்கள் மீண்டும் பேசுந் திறன் பெறுவதற்கு அளிக்கப்படும் மொழித்திறன் பயிற்சி.

sperm(spermatozoa) : விந்தணு; ஆண்கருவுயிர் நீர்மம் : பெண் கரு முட்டைக்குப் பொலிவூட்டும் ஆண் கருச்சத்து; ஆண்கரு உயிர்மம். ஒருமுறை வெளியேறும் விந்துநீர்மத்தில் விந்தணுக்கள் 6 கோடிக்கும்