பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1019

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sphincteroplasty

sphygmotometer


sphincteroplasty : சுருக்குதசை சீரறுவை : ஒய் வடிவக்கீறலை 'வி' வடிவாக மாற்றுவதன் மூலம் சுருக்குதசையை அறுவை முறையில் சீரமைப்பு செய்தல்.

sphinterotomy : சுருங்கு தசை அறுவை : சுருங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல்.

sphingomyelinase : ஸ்பிங்கோமைலினேஸ் : கொழுப்பு வளர் சிதை மாற்றத்திலும், சேமிப்பிலும் இன்றியமையாத ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).

sphingmogram : நாடி அதிர்வுப் பதிவு.

sphygmogram : நாடிப்பதிவு : நாடிப் பதிவுமானி கொண்டு தமனித்துடிப்பை பதிதல்வளைவுப்பதிவில் திடீரென மேலெழுந்து திடீரெனக் கீழிறங்கு அதன்பின் மெதுவாக இறங்கும்போது சிறு ஏற்றங்கள் காணப்படுதல்.

sphygmograph : நாடிப்பதிவு மானி; நாடி வரைவி : நாடித் துடிப்பினைப் பதிவு செய்வதற்கு மணிக்கட்டில், நாடித் தமனி மீது பொருத்தப்படும் ஒரு கருவி.

sphingmology : நாடி அதிர்வியல் : நாடி துடிப்பினை ஆராயும் அறிவியல்.

sphygmotometer : குருதி அழுத்தமானி; குருதிக் குழாய் அழுத்தமானி; குருதி அழுத்த வியல்; நாடி அழுத்தமானி : இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி.

sphygmophone : நாடி ஒலிக்கருவி : நாடி அதிர்வொலியைக் காட்டும் கருவி.

sphygmoscope : நாடி நோக்கி : நாடித்துடிப்பை காணச் செய்யும் கருவி.

sphygmotometer : தமனிநெகிழ் மானி : தமனிச் சுவர்களின் நெகிழ் தன்மையை அளக்கும் கருவி.