பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alphafeto-protein

101

alveolus


தசை நார்களைக் கரைத்து, கண்ணின் பாவை வழியாகக் காயத்திலிருந்து பளிக்குவில்லையை (லென்ஸ்) வெளியே எடுப்பதற்கு இது உதவுகிறது. இதனை வாய் வழி உட்கொள்ளும்போது வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.

alphafeto-protein : ஆல்ஃபா ஃபெட்டோ-புரதம் : முதிர்கரு இயல்புதிரிந்து இருக்கும் நேர்வுகளில் தாயின் நிணநீரிலும், கருவை அடுத்து சுற்றியுள்ள சவ்வுப்படலத்தின் நீர்மத்திலும் இருக்கும் பொருள்.

alpha-toco-pherol : ஆல்ஃபா டோக்கோ-ஃபெரோல் : வைட்டமின் 'E' என்ற ஊட்டச்சத்தின் மருத்துவப் பெயர்.

alprenolol : ஆல்ஃபிரனோலால் : அண்ணீரகச் சுரப்பியிலிருந்து இயக்குநீர் சுரப்பதைத் தடுக்கும் மருந்து. இடதுமார்பு வேதனை தரும் இதய நோயில், நெஞ்சுப் பையின் இயக்கத்தைக் குறைக்கிறது. இதயத் துடிப்பு வேக வீதத்தையும், நெஞ்சுப்பை இயக்கு நீர் சுரக்கும் அளவையும், தமனி அழுத்தத்தையும் குறைக்கிறது.

alrine : வயிறு சார்ந்த.

alternative medicine : மாற்று மருத்துவம் : அலகுமுனை மருத் துவம் (அக்குபங்ச்சர்), உயிரியல் பின்னூட்டு, வர்ம மருத்துவம், இனமுறை மருத்துவம் (ஓமியோபதி), தசைத் தளர்ப்பீடு யோகம் போன்ற மாற்று மருத்துவமுறைகள்.

alum : படிக்காரம் : பொட்டாசியம் அல்லது அம்மோனிய அலுமினிய சல்ஃபேட். இதன் இறுகச்செய்யும் தன்மை காரணமாக, வாய்கொப்பளிக்கும் திரவ மாகவும் (1%) நச்சுப்பொருளை வெளியேற்ற பீற்றுக் குழலின் தாரையாகவும் (0.5%) பயன்படுகிறது.

aluminium hydroxide : அலுமினியம் ஹைட்ராக்சைடு : வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து; புளிப்பு மாற்றுமருந்து; புளிப்புத் தன்மைக்கு எதிரீடானது. இரைப்பைப்புண்ணைக் குணப்படுத்து வதற்குப் பயன் படுத்தும்போது நீண்ட நாட்கள் வினை புரிகிறது. இது பெரும்பாலும் மென்மையான பாலேடு அல்லது கூழ்வடிவில் இருக்கும்.

aluminium paste : அலுமினியம் களிம்பு : அலுமியத்துள், துத்தநாக ஆக்சைடு, திவக் கன் மெழுகு (பாரஃபின்) ஆகியவை கலந்த ஒரு களிம்பு. இது தோல் காப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை 'பால்ட்டிமார் களிம்பு' என்றும் கூறுவர்.

alupent : அலுப்பென்ட் : 'ஆர்சிப்ரனலின்' சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

alveolus : கண்ணறை.