பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1027

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spurious diarrhoea

1026

staccato speech


மலப்போக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

spurious diarrhoea : போலி வயிற்றுப் போக்கு : திண்மமான மலத்துடன் சேர்ந்த திரவமலம் வெளியேறுதல். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இது ஏற்படுகிறது.

squamocolumnar junction : செதிள்மேலணுசந்திப்பு : தொண்டையின் மூக்குப் பகுதி, உணவுக் குழலிரைப்பைச் சந்தி, கருப்பைக் கழுத்து மற்றும் குதம் ஆகியவற்றில் ஏற்படும் செதிள்மேலணு அடுக்குசுரப்பு, சுரப்பி மேல் அணு அடுக்காக மாறும் பகுதி.

squamoparietal : செதிள் சுவர் பற்றிய : பொட்டெலும்பின் செதிள் பகுதி மற்றும் மண்டைப் பக்க எலும்பு தொடர் பகுதி.

squatting : சம்மணமிடல் : நீலம் பாரிக்கும் இதய நோயுள்ள குழந்தை குறிப்பாக, ஃபேல்லோதால் நோய் நிலையில் திடீர் குருதி ஆக்ஸிஜன் குறைவில், மேற்கொள்ளும் நிலை. வல இட குருதிப் பாய்வைக் குறைத்து, உடல் நாளத் தடையை அதிகரித்து, துரையீரல் குருதி ஒட்டம் அதிகரித்து மூச்சுத் திணறலைக் குறைக்கிறது.

squeezing technique : அழுத்தும் செய்முறை : ஆண்குறை முகைக்குக் கீழே அழுத்துவதன் மூலம் விந்து முந்துதலைத்தடுத்தல்.

squma : செதிள்(சிம்பு) : செதிள் போன்ற எலும்புப் பகுதி.

squamasal : செப்பை எலும்பு : செதிள் போன்ற செப்பை எலும்புப் பகுதி.

squamous : செதிள் படலம் : உடலின் புறப் பரப்புகளை மூடியிருக்கும் சுரப்பிகளற்ற செதிள் போன்ற புறப்படலம்.

squills : அல்லிப்பூண்டு : சிறுநீர் தூண்டும் மருந்தாகவும், பேதி மருந்தாகவும் பயன்படும் அல்லியினப் பூண்டு.

squint : மாறுகண் : ஒருக்கணிப்புக் கண் : பக்கவாட்டுப் பார்வை. கண்விழித் தசைகள் ஒருங்கிணைந்து இயங்காத காரணத்தால், இரு கண்களின் பார்வை அச்சுகளும் பொருள் புள்ளியில் சந்திக்காமல் இருத்தல்.

stability : நிலைப்பு; திடநிலை : மாற்றத்தைத் தடுக்கும் அல்லது நிலையாயிருக்கும் நிலை.

staccato speech : திக்குவாய் : சொற்களிடையே இடைவெளி விட்டுப்பேசுதல் அனும உள்ளரிக் காழ்ப்பு, மூளை