பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1030

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

staphylotomy

stecomyia


staphylotomy : உள்நாவறுவை : 1. உள்நாக்கு அறுவை, 2. கண் துருத்தம் பகுதியை வெட்டி யெடுத்தல்.

stapler : தைப்புக் கருவி : தையல் போடாமல், குடல் பகுதியை இணைக்கும் ஒரளவு தானியங்கு கருவி.

starch : மாச்சத்து : உருளைக் கிழங்கு, அரிசி, சோளம் ஆகிய வற்றில் இருக்கும் கார்போ ஹைட்ரேட் கஞ்சிப் பசையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

starvation : பட்டினி கிடத்தல் : உணவுண்ணாமல் நீண்ட நாட் களுக்கு இருப்பதால் உண்டாகும் ஊட்டக் குறைபாடும், எடையிழப்பும்.

stasis : 1. குருதியோட்ட நிறுத்தம்; தேக்கநிலை : இரத்தவோட்டம் தேக்கமடைதல். 2. மலத்தேக்கம்: இரைப்பை சரியாகச் சுருங்கி விரியாததால் ஏற்படும் மலச்சிக்கல்.

static : அசைவிலா.

statics : நிலையியல்.

statoacoustic : சமநிலை கேட்பு பற்றிய : சமநிலை மற்றும் கேட்டல் தொடர்பான.

statoconia : செவிக்கல் : செவிச் சிறுபை மற்றும் நுண்மையில் ஒட்டிக் கொண்டுள்ள கால்சியம் கார்பனேட் மற்றும் புரதத் துகள்கள்.

STD : பாலுறவு நோய்கள் : பாலுறவு மூலம் பரவும் நோய்கள்.

statometer : கண்துருத்தமானி : கண்துருத்தமானி இயல்புக்கு மாறான கண்துருத்தத்தின் அளவை அறியும் கருவி.

status asthmaticus : நீடித்த ஈளை நோய்; தொடரும் இழுப்பு நோய்.

statu sepileptius : இடையறா வலிப்பு நோய்.

steal : தடமாறி குருதியோட்டம்.

steatorrhoea : கொழுப்பு மலப்போக்கு; கொழுப்பு மல பேதி : பல்வேறு ஈர்ப்புக் கோளாறினால், வெளிறிய, பெருத்த, பசையுடைய கெட்ட நாற்றமுடைய மலம் கழிதல்.

steatocele. : அண்டவாயு : விரைப்பை வீக்கம்.

steatoma : விதை வீக்கம் : பையிலுள்ள விதை வீக்கம்.

steatopygia : பிட்டக்கொழுப்புப் புடைப்பு.

steatorrhoea : மஞ்சள் பேதி.

stocomyia : முறைக்காய்ச்சல் கொசு : முறைக் காய்ச்சலை (மலேரியா) பரப்பும் ஒருவகைக் கொசு இனம், இந்த ஒட்டுயிர்