பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1031

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stein-Leven...

1030

stercobilin


பெரும்பாலான வெப்ப மண்டல நாடுகளிலும், வெப்பமண்டலம் சார்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது.

stein-Leventhal syndrome : துணைமை மாதவிடாய் தோன்றாமை : வாழ்க்கையின் இருபது அல்லது முப்பது வயதுகளில் உண்டாகும் மலட்டுத்தன்மை. இருபுறமும் அண்டப்பையில் பல நீர்க்கட்டி கருவகங்கள் மயிரடர்த்தி ஆகியவை தோன்றுதல். இது சில சமயம் ஆப்பு அறுவை மூலம் குணப்படுத்தப் படுகிறது.

stellate : விண்மீன்வடிவ : நட்சத்திர வடிவ, ரோசாவடிவ வரிசை யமைவு, குப்ஃபெர் அணுக்கள் மற்றும் தாரகையனுக்கள் போன்ற விண்மீன் வடிவ உயிரணு,

Stellwag's sign : இமையாமை நோய் : இயல்புக்குமீறிக் கண் விழிபிதுங்கியிருக்கும்போது, நோயாளி இயல்பான அளவு கண்ணிமைக்காமலும், கண்ணிமைகளை முழுமையாக மூடாமலும் இருக்கும் நிலை.

stem cells : மூல உயிரணுக்கள் : உடலிலுள்ள மற்ற உயிரணுக்கள் அனைத்திற்கும் தோற்றுவாயாக அமைந்துள்ள உயிரணுக்கள், எலும்பு, குருத்தெலும்பு, ஈரல் குலை, நரம்பு, குடல்நாளம், துரையீரல், மயில் உயிரணுக்கள் ஆகிய அனைத்தும் இந்த ஆதார உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன. மனித மூல உயிரணுக்களைத் தனிமைப் படுத்தி, குறிப்பிட்ட உயிரணுக்களை ஆய்வுக்கூடத்தில் வளர்க்கலாம்; இவற்றை நோயுற்ற இரத்த, தசை, நரம்பு உயிரணுக்களுக்குப் பதிலாக மாற்று அறுவை மருத்துவம் மூலம் பொருத்தலாம்.

stemocardia : இடது பக்க மார்புவலி.

stenosis : குறுக்கம்; இரைப்பை காப்பு; வாயில் சுருக்கம் : முன் சிறு குடல் புண்ணைக் குணப்படுத்தும் போது வடுத்திசு உருவாகி இரைப்பை வாயில் காப்பு சுருங்குதல்.

stenothermal : வெப்பந்தாங்கு : உடல்வெப்பநிலையில் சிறிதளவு மாற்றங்களை மட்டும் தாங்கமுடிகிற.

stenothorax : குறுகிய மார்பு : ஒரு ஒடுங்கிய குறுகிய மார்புக் கூடு.

stepsin : ஸ்டெப்சின் : கொழுப்பை கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசரைனாகவும் பகுக்கக் கூடிய ஒரு பொருள். இது கணைய நீரில் உள்ளது.

stercobilin : ஸ்டெர்கோபிலின் : மலத்தின் பழுப்பு வண்ண