பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1036

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Stoma

1035

stomatodeum


குறைபாட்டினால் உண்டாகும் உணர்விழப்பு, இதய நாடி அடைப்புள்ள நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது. இது கடுமையானால் நோயாளிக்கு வலிப்பு உண்டாகி உணர்விழந்து விடுவார்.

stoma : வாய்புழை : ஒரு புழை; திறப்பு.

stomach : இரைப்பை; அகடு; வயிறு : சீரணக் குழாயில் மிகவும் விரிவடைந்த பகுதி, உணவுக் குழாய்க்கும் சிறுகுடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் சுவர், ஊனீர் மென்சவ்வு, தசை, சளிச்சவ்வு, அடிச்சளிச்சவ்வு ஆகிய நான்கு படலங்களின் உள்வரிப்பூச்சுகளைக் கொண்டது.

stomach-ache : வயிற்றுவலி.

stomach-cough : சிறுகுடல் அழற்சி இருமல்.

stomachalgia : வயிற்றுவலி : வயிற்றில் வலியுண்டாதல்.

stomach gastricring : இரைப்பை நரம்பு வளையம்.

stomachics : செரிமான மருந்துகள்; பசியூக்கி; பசி தூண்டி : செரி மானத்திற்கு உதவுகிற மருந்துகள்.

stomach-tube : இரைப்பை தூய்மைக் குழாய்.

stomalities : வாய்புண்; வாய்அழிற்சி.

stomatology : வாய் நோய் மருத்துவவியல்.

stomal ulcer : புழைவாய்ப்புண் : இரைப்பை நடு சிறுகுடலி ணைப்பிடத்தில் புண்.

stomatalgia : வாய்வலி : வாயில் உண்டாகும் வலி.

stomatitis : வாய்புண்; வாய்அழிற்சி : ரைபோஃபிளேவின் பற்றாக் குறையினால் வாயில் வெடிப்பு ஏற்பட்டு புண் அல்லது வீக்கம் உண்டாதல்.

stomatodeum : வாய் மூலம் : வாயும் மூக்குக்குழிவறையும் உண்டாகவிருக்கும் பொதுவமைப்பு.