பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1037

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stomatodynia

1036

straight leg...


stomatodynia : வாய்நோவு : வாயில் வலியுண்டாதல்.

stomatognathic : வாய்த்தாடைசார் : வாயையும் தாடையையும் சேர்த்துக் குறிக்கும்.

stomatology : வாய்நோயியல் : வாய் மற்றும் அதன் நோய்கள் தொடர்பான மருத்துவப் பிரிவு.

stomatomenia : வாய்க்குருதியொழுக்கு : வேற்றிட மாதப்போக்குபோல் தோன்றும் ஈறுகளில் இரத்தம் வடிதல்.

stomatomycosis : வாய்ப்பூஞ்சனத்தொற்று : வாய்க்குழிவறையின் பூஞ்சன நோய்.

stomocephalus : வாய்த்தலை : வாயும் தாடையும் அரைகுறையாக வளர்ந்துள்ள முதிர்கரு.

stomodeum : வாய்முதல் : வாயின் முன்பகுதியாக உருவாகயிருக்கும் கருவின் தலைமுனையிலுள்ள வெளி அனுப்படலக் குழிவு.

storm : புயல்நிலை : 1. அறிகுறிகள் மிகைப்படுத்தல், 2. ஒரு நோய் வளர் நிலையில் தீவிர திருப்பம்.

stomy ; ஸ்டோமி : ஒரு திறப்பை உருவாக்கும் அல்லது ஒரு இடைத்தொடர்பு குறிக்கும் கூட்டுச் சொல்.

stone : கல் : உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் கற்கள். இது கனிமப் பொருளின் சேர்க்கையால் திசுக்களுக்குள் உண்டாகலாம். கற்கள் நாளங்களில் நகரும்போது வலியும் அடைப்பும் நிகழும்.

stool : கழிமலம்; நரகல்; மலம்.

stove-in chest : விலா எலும்பு முறிவு; புதை குத்து மார்பு : மார்புக்கூட்டெலும்புகளில், முன்புறம் அல்லது பின்புறம் பல முறிவுகள் ஏற்படுதல் அல்லது அத்தகைய முறிவுகளின் கலவை.

strabismometer : மாறுகண் அளவி : மாறுகண் நிலையை அளக்கும் கருவி.

strabismus : மாறுகண் : கண்களால் ஒரிடத்தில் நிலைத்து நிற்க முடியாமை ஒருக்கணிப்புப் பார்வை.

strabotomy : மாறுகண் அறுவை : ஒருக்கணிப்புப் பார்வையை சரி செய்ய, ஒன்று அல்லது மேற்பட்ட கண்தசைகள் அல்லது அவற்றின் தசை நாண்களை வெட்டுதல்.

straight leg raising test : காலை நேரே மேல்துக்கும் சோதனை : இடுப்பு நரம்பு பாதிப்பில் நோயாளி நீட்டிய காலை மேலே தூக்குவதைத் தடுக்கும் வலி நிலை பரிசோதிப்பவரின் கை கொண்டு நீட்டிய காலை.