பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ambidexterity

103

amenorrhoea


ambidexterity : ஒருப்போல் இருகைத் திறன் : இருகைகளையும் ஒரே விதமாகத் திறம்படப் பயன்படுத்தும் திறன்.

ambidextrous : ஒருப்போல் இரு கைப் பழக்கம்; இரு கைச் சமன் திறன்; இரு கை நிகரிய : இரு கைகளையும் ஒரே வகையாகத் திறம்படப் பயன்படுத்தக் கூடிய.

ambiguous : ஐயமுள்ள; ஐயுறவான.

ambilhar : அம்பில்கார் : 'நிரிடாசோல்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ambivalence : இருமனப்போக்கு; விருப்பும் வெறுப்பும் : ஒருவரிடம் ஒரே சமயத்தில் எதிர்மாறான இருமுக உணர்ச்சிப் போக்கு இருத்தல். (எ-டு) அன்பு, பகைமை.

amblyopia : பார்வை மந்தம்; மங்கு பார்வை : குருட்டுத் தன்மையின் அளவுக்குப் பார்வை மந்தமாக இருத்தல். இதனை 'புகை பிடிப்போர் குருடு" என்றும் கூறுவர்.

ambu bag : உயிர்மூச்சுப் பை : செயற்கை சுவாசம் அளிக்க உதவும் இரப்பரால் ஆன பை. ஒன்றிலிருந்து ஒன்றரைலிட்டர் கொள்ளளவு கொண்டது. தானே காற்றை நிரப்பிக் கொள்ளும் விதத்தில் தடுக்கிதழ் அமையப் பெற்றுள்ளது.

ambulance : நோயாளி ஊர்தி (ஆம்புலன்ஸ் : நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஊர்தி. இயங்கு மருந்தகம். இயங்கு மருந்தகமாக இருக்கிற ஊர்தி.

ambulant : இடப்பெயர்வு.

ambulatory : ஊர்தி மருத்துவம் : நோயளிகள் இருக்கும் இடங் களுக்கு நோயாளி ஊர்தியில் சென்று, நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து அவர்களின் முன்னேற்றம் குறித்து மருத்துவ மனையின் புறநோயாளர் துறைகளுக்குத் தெரிவித்தல்.

amelia : உறுப்புக் குறைபாடு; பிறவி ஊமை; அங்கமின்மை : பிறவியிலேயே உறுப்பு அல்லது உறுப்புகள் இல்லாதிருத்தல். அது 'முழு உறுப்புக் குறைபாடு' எனப்படும்.

amelification : பற்சிப்பி உருவாகும் முறை.

amelioration : நோய்க் கடுமை குறைப்பு; நோய்த் தணிவு; நோய்க் குறைவு : நோய்க் குறிகளின் கடுமையைக் குறைத்தல்.

amenorrhoea : மாதவிடாய் தோன்றாமை; மாதவிலக்கின்மை; தீட்டு நிறுத்தம்; போக்கு நிறுத்தம்; தீட்டு மாறுகை : மாதவிடாய் தோன்றாதிருத்தல்; மாதவிடாய்