பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1040

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Stress

1039

string sign


அவற்றை உணர்ந்துபொருளை அடையாளம் காணும் திறமை. அது தொடு, இருக்கை, இயக்க உணர்வைச் சார்ந்தது.

stress : அழுத்தம்; அதிர்ச்சி; நெருக்கடி : மனநெருக்கடி அல்லது உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் தளர்ச்சி அல்லது தேய்மானம். இது உடலியல் அல்லது உளவியல் காரணமாக உண்டாகலாம்.

stretcher : தூக்குபடுக்கை : இறந்த, காயம்பட்ட நோய் வாய்பட்டவர்களை தூக்கிச் செல்ல உதவும் கருவி பொருள்.

striae : படுவரி; நிறமிக் கோடுகள் : அடிவயிற்றின் மேற்பரப்பில் ஏற்படும் படுகைக் கோட்டு வரி அடையாளம் கருவுற்றிருக்கும் போது அடிவயிற்றுத் தோல் நீட்சியடைவதால் இது உண்டாகிறது. முதலில் இது சிவப்பு நிறமாக இருக்கும்; பின்னர் வெள்ளி போல் வெண்மையாக மாறும்.

straited membrane : வரிச் சவ்வுப் படலம்.

striater muscle : வரித் தசை.

striatonigral : கரும்வரிக்கோடு : கரும்பொருளுடன் வரிக்கோ டமைப்புகளின் தொடர்பைக் குறிக்கும்.

strictition : குறைகொள்ளளவு : கரைபொருள் கரைப்பான் கலக்கும்போது இடைவினையால் மொத்தக் கொள்ளளவு குறைதல்.

stricture : குறுக்கம்; வழியடைப்பு; ஒடுக்கம் : நாடி நரம்பு நாளங் களில் திசுத் தழும்பு அல்லது கட்டி காரணமாக குழாய் வழி குறுகுவதால் உண்டாகும் நெரிசல் கோளாறு.

stricture rectam : மலக்குடல் சுருக்கம்.

stricture urethra : சிறுநீர்ப்புறவழி சிறுத்தல்.

stricturisation : உள் அளவு குருக்கல் : உள்ளளவைக் குறுக்கும் செய்முறை.

strictureplasty : குறுக்கச் சீரறுவை : குடல் குறுக்கத்தை நெடுக்கில் கீறி குறுக்காகத் தைத்து, விரிவடையச் செய்யும் அறுவை.

stridor : கரகரப்பு மூச்சோட்டம்; மிகை மூக்கொலி; மூச்சிரைப்பு : இடுங்கிய வழியில் காற்று செல்வதால் உண்டாகும் கரகரப்பான ஒலியுடன் மூச்சுவிடுதல்.

string sign : கயிற்றுக்குறி : க்ரான் நோயில் எக்ஸ்ரே படத்தில் தெரியும்படியான நிறப் பொருளின் மெல்லிய கோடு.