பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1042

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Strumpell-Marie...

1041

stye


மாந்திப் பகுதியில் இந்நோய் மிகுந்திருப்பதால் இப்பெயர்.

Strumpell-Marie disease : ஸ்ட்ரும்பெல்-மேரி வியாதி : அடால்ஃப்ஸ்ட்ரும்(ப்)பெல் எனும் ஜெர்மன் மருத்துவர் மற்றும் ஃபிரெஞ்சு மருத்துவர் பியர் மேரியின் பெயர் கொண்ட முதுகெலும்பு மூட்டுப் பிடிப்பு அழற்சி.

strurite : ஸ்ட்ரூரைட் : மக்னீசியம், அமோனியம் ஃபாஸ்ஃ பேட்டாலான சிறுநீர்ப் பாதைத் தொற்றுக் கல்.

stump : துண்டித்த உறுப்படி : வெட்டியெடுக்கப்பட்ட பிறகு மீதியுள்ள ஒரு உறுப்பின் அடிப்பகுதி.

stunting : வளர்ச்சிக் குறைதல் : நாட்பட்ட வியாதி அல்லது நெடுநாள் ஊட்டக் குறைபாட்டால் எடை அதிகமாகாமல் இயல்பான வளர்ச்சி இல்லா நிலை.

strychnine : எட்டிச் சத்து; எட்டிக்காய் : நரம்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நச்சு மருந்து. இது எட்டிக்காயிலிருந்து எடுக்கப்படுகிறது.

student's elbow : மாணவர் முழங்கை : பசை நீர்ச் சுரப்பி வீக்கம்.

stupe : ஒற்றடம்; நீர் ஒற்றடம் : மருத்துவமுறைப்படி ஒற்றடம் கொடுத்தல், வலி நீக்குவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. எரிச்சலைத் தடுக்கக் கர்ப்பூரத் தைலம் சேர்க்கப்படுகிறது.

stupefacient : உணர்வுமயக்கமூட்டி : 1. உணர்வு மயக்கம் தூண்டுதல், 2. உணர்வு மயக்கம் உண்டாக்கும் பொருள்.

stupor : உன்மத்த நிலை; அரை மயக்கம் : செயலற்ற திகைப்பு நிலை மதிமயக்க நிலை உணர்விழந்த தன்மை மந்த நிலை.

Sturge-Weber sindrome : தோல் புறப்படல அழற்சி : பிறவியில் உண்டாகும் தோல் புறப்படல அழற்சி நோய். இது மண்டையோட்டின் உள்ளேயிருக்கும் நாளங்களில் தந்துகி மாற்றங்களினால் ஏற்படுகிறது. இத னால், காக்கை வலிப்பு போன்ற மூளைநோய்கள் உண்டாகின்றன.

stutter : திக்குப் பேச்சு; திக்குதல்.

stuttering : தெற்றிப் பேசுதல் : சொல்லப்பட்ட வார்த்தையின் முதல் எழுத்தை திரும்பத் திரும்பத் திக்கிப் பேசும் பேச்சுக் குறைப்பாங்கு. 2. வியாதி இடையிடையே தீவிரமாதல்.

stye : கண் மயிர்க்கால் கட்டி; இமை வீக்கம்; கண்ணிமைக்கட்டி : கண்ணிமையில் உண்டாகும் சிறுகட்டி இமை வீக்கம்; கண் கட்டி இமைக் குரு.