பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1045

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subjective

1044

subnasal


subjective : தன்னுணர்வு : மற்றவர்களுக்குப் புலனாகாமல், தன் உள்ளுணர்வால் உணர்ந்து அறிதல்.

subjective global assessment : சான்றுசார்முடிவு : கிடைக்கும் எல்லா சான்றுகளினடிப்படையில் மருத்துவர் முடிவு செய்து, அறுவை சிகிச்சைக்கு முன் தகுதிச் சான்றிதழ் தருதல்.

sublimate : பதங்கம்; ஆவி உறை படிவு; வளிமமாதல் : சூடேற்றி பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட பொருள்.

sublimation : பதங்கமாதல் : 1. ஒரு திடப்பொருள் நேரடியாக வளியமாதல் 2 முதல் நிலைத் தூண்டல், ஏற்கப்படக்கூடிய செயலாக மாறியமைதல்.

sublime : வளியமாக்கு : 1. சுட வைத்து ஆவிநிலைக்கு கொண்டு வந்து பின் குளிரவைத்து கெட்டியாக்கு. 2. உணர்வுகளை விழித்தெழச் செய்தல்.

sublingual : நாக்கடியில்; நாவடி :

sublinguitis : நாவடியழற்சி : நாவடிச் சுரப்பியின் அழற்சி.

subluxation : அரை குறை மூட்டுப் பெயர்வு; மூட்டு நழுவல்; மூட்டுப் பிசகுதல் : ஒரு மூட்டு அரைகுறையாக இடம் பெயர்ந்திருத்தல்.

submammary : முலையடி : மார்புச் சுரப்பிக்குக் கீழே.

submandibular : தாடையடி; தாடையின்கீழ்; கீழ் தாடையடி : கீழ்த் தாடைக்குக் கீழே.

submandibularitis : கீழ்த்தாடையடி அழற்சி : புட்டாலம்மையில் போல் கீழ் தாடையடி சுரப்பியை பாதிக்கும் அழற்சி.

submaxillary : கீழ்த்தாடை சார்ந்த; கன்ன எலும்படி : கீழ்த் தாடைக்கு அடியிலுள்ள.

submentovertical : தாடை நெடுக்கு அளவு : குழந்தை பிறப்பில் இமை முதலில் தோன்றும் போதுள்ள குழந்தைத் தலையின் நீட்டளவு.

submersion syndrome : மூழ்கல் நோயியம் : மூச்சிழப்பு, நீலம் பாரித்து, காய்ச்சலும் உள்ள நீரில் மூழ்கியது போன்ற நிலை.

submicron : நுணங்கணு : சிறப்பு நுண்ணோக்காடியில்லாமல் பார்க்க முடியா நுண்ணணு.

submucous : சளிச்சவ்வின் கீழ் : சளிச் சவ்வின் கீழிருக்கிற.

subnarcotic : அரைத்தூக்கமூட்டுகிற : ஏறத்தாழ தூக்க மயக்கம் ஊட்டுகிற இளமறமறப்பூட்டுகிற.

subnasal : மூக்கடி : மூக்கின்கீழ் அமைந்துள்ள.