பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1046

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subnasale

1045

substance


subnasale : நாசியடி : மூக்குப் பிரிகவர், நடுக்கோட்டுத் தளத்தில் மேலுதட்டுடன் இணையுமிடம்.

subneural : நரம்புக்கணுவடி : நரம்புக் கணுவுக்கு அடுத்துக் கீழுள்ள நரம்படி.

subnormality : இயல்பு நிலைக்குக்கீழ் : இயல்பு நிலைக்குக் குறைந்த தன்மை, மன வளர்ச்சி முழுமை பெறாதிருக்கும் நிலை. இது மருத்துவச் சிகிச்சையினால் குணமாகி விடக்கூடியது.

suboccipital : பிடரியெலும்படி; பிடரியடி; பின் உச்சியடி : பிடரி எலும்பின் கீழுள்ள.

subocular : கண்ணடி : கண்ணின் கீழுள்ள கண்கோளத்தின் அடியில்.

suboesophogeal : உணவுக் குழாயடி : உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள.

suborbital : கட்குழியடி : கடகுழியின் கீழுள்ள.

suborder : துணைவகுப்பு : வகுப்புக்கும் தொகுப்புக்கும் இடையிலுள்ள வகுப்பு தொகுப்பு வகை.

subperiosteal : எலும்புச் சவ்வடி; எலும்புப் புறவடி : எலும்புகளை முடியுள்ள சவ்வுக்கு அடியிலுள்ள.

subpharyngeal : தொண்டையடி : தொண்டையின் அடியிலுள்ள.

subphrenic : உதரவிதானம் கீழ்; விதானவடி : உதர விதானத்திற்கு அடியிலுள்ள.

subphylum : துணையினம் : இனத்துக்கும், வகுப்புக்கும் இடைப்பட்ட வகுப்பு தொகுப்பு முறைவகை.

subpilose : சிறிது மயிர் மூடிய.

subpleural : நுரையீரல் உறையடி : நுரையீரல் உறைக்கு அடியில் உள்ள.

subretinal : கண்விழித்திசைகீழ்.

subsacral : குத எலும்பு முன் : மனிதரின் முக்கோணக் குத எலும்பின் முன்னுள்ள.

subscapular : தோள்பட்டை எலும்பு முன்.

subserous : நிணநீர்ச் சவ்வடி : நிணநீர்ச் சவ்வின் கீழுள்ள.

subspecies : துணைவகை : ஒரு வகைப் பிரிவுக்கும் கீழான வகுப்பு தொகுப்பு முறைப்பிரிவு.

subspinale : முள்ளடி : மூக்கெலும்பு முன் மற்றும் மேல் தாடை முகட்டுக்கும் இடைப் பட்ட மிகவும் பின்னமைந்த நடுக்கோட்டிடம்.

substance : பொருள்; பண்டம் : பருப்பொருள் அல்லது மூலக் கூறு அல்லது பிராணி அல்லது தாவர மூலக்கூறுகள் தொகுதி.