பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1049

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

suggestion

1048

suiphafurazole


பட்ட தன்மை. இது குழந்தைகளிடம் மனவளர்ச்சிக் குறைபாட்டையும், வயது வந்தவர்களிடம் இசிவு நோயையும் உண்டாக்கும்.

suggestion : உளத்தூண்டுதல் : ஒருவர் தருக்கமுறைக் காரணமின்றி ஒரு கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்படி செய்தல், ஒரு நோயிலிருந்து மீள முடியாதென நம்பிக்கையிழந்திருக்கும் நோயாளியிடம் அவரது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையை ஊட்டுதல், சூசிப்பித்தல்.

suicide : தற்கொலை : ஒருவர் தன் உயிரை தானே போக்கிக் கொள்ளும் செயல்.

suicidology : தற்கொலையியல் : தற்கொலைகளின் காரணங்கள், முன்னறிதல் மற்றும் தடுத்தல் பற்றிய பாடம்.

sulbactum : சல்பேக்டம் : பெனிசிலினை பாதுகாக்கும் பீட்டா லாக்டமேனஸ் தடுப்பி.

sulcus : கோட்டுக்குழிவு; வரிப் பள்ளம்; ஆழ் வடு : பிளவு குறிப்பாக மூளையில் உள்ளது அல்லது சிறுபள்ளம்.

sulfametopyrazine : சல்ஃபாமெட்டொப்பைராசின் : சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் சல்ஃபோனாமைடு என்ற மருந்து. இது நீண்ட காலம் வேலை செய்யக் கூடியது.

sulphacetamide : கல்ஃப்சிட்டாமைடு : கண் சொட்டு மருந்தாக வும் சிறுநீர்க் குழாய்க் கோளாறுகளுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு சல்ஃபோனாமைடு மருந்து.

sulphadiazine : சல்ஃபாடையாசின் : பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப்படும் ஒர் ஆற்றல் வாய்ந்த சல்ஃபோனாமைடுக் கூட்டுப்பொருள்.

sulphadimethoxine : சல்ஃபாடிமெத்தாக்சின் : சிறுநீர் நோயைத் தடுக்கப் பயன்படும் ஒரு சல்ஃபோனாமைடு மருந்து.

sulphadimidine : சல்ஃபாடைமிடின் : சல்ஃபோனாமைடு மருந்துகளில் ஆற்றல் மிகுந்ததும், நச்சுத் தன்மை குறைந்ததுமான மருந்து. இதன் பக்க விளைவுகள் மிகக்குறைவு, குழந்தை மருத்துவத்தில் மிகவும் பயன் உடையது.

sulphaemoglobinaemia : சல்ஃபேமோ குளோபினேமியா : இரத்தத்தில் சல்ஃபாமெத்தியா குளோபின் சுற்றோட்டமாக ஒடும் நிலை.

sulphafurazole : சல்ஃபாஃபரசோல் : மூச்சுக்குழாய், சிறுநீர்க் குழாய் நோய்களில் முக்கிய